ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்த சுமார் 1200 வெளிநாட்டவர்களின் விசாக்கள் கடந்த ஆண்டு ரத்துச்செய்யப்பட்டு, அவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
கொலை, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் உள்ளிட்டவர்களின் விசாக்களே, இவ்வாறு ரத்துச் செய்யப்பட்டதாக, குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் 430 விசாக்களும், குயின்ஸ்லாந்தில் 300 விசாக்களும், விக்டோரியாவில் 217 விசாக்களும், நடத்தை அடிப்படையில் ரத்துச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை நாடுகடத்துவதன்மூலம், ஒரு வலுவான செய்தியை, ஆஸ்திரேலிய அரசு, ஏனையவர்களுக்கு தெரியப்படுத்துவதாக உள்துறை அமைச்சர் Peter Dutton கூறியுள்ளார்.