கடந்த வருடம் 1000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களின் ஆஸ்திரேலிய விசாக்கள் குடிவரவுத்திணைக்களத்தினால் ரத்துச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலைக்குற்றம், தாக்குதல் சம்பவங்கள், சிறுவர் துஷ்பிரயோகம், வன்முறை, போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்கள், ஆட்கடத்தல், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களின் ஆஸ்திரேலிய விசாக்களே குடிவரவுச்சட்டத்தின் 501வது சரத்தின் கீழ் ரத்துச் செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 359 பேர், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 301 பேர், விக்டோரியா மாநிலத்தில் 173 பேர், மேற்கு ஆஸ்திரேலியாவில் 168 பேர், தெற்கு ஆஸ்திரேலியாவில் 41 பேர், Northern Territory-யில் 7 பேர், ACT-யில் 4 பேர், Tasmania-வில் 3 பேர் தமது ஆஸ்திரேலிய விசாக்களை இழந்துள்ளதாக குடிவரவு அமைச்சர் Peter Dutton தெரிவித்தார்.
குற்றச்செயல்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு இப்படியான நடவடிக்கைகள் அவசியமாவதாக குறிப்பிட்ட அமைச்சர் Peter Dutton, பாரிய குற்றச்செயல்களிலில் ஈடுபடுபவர்களின் விசாக்கள் ரத்துச் செய்யப்பட்டு அவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவர் என எச்சரித்தார்.