கடந்த நிதியாண்டில் 57,440 பேரின் ஆஸ்திரேலிய விசாக்கள் ரத்துச் செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் 900 பேரின் விசாக்கள் நடத்தை அடிப்படையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக மோட்டார் சைக்கிள் குழு உறுப்பினர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ,கொலை, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் உள்ளிட்டவர்கள் இதில் அடங்குவதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பலநாடுகளிலுள்ள விமானநிலையங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிகாரிகள் சுமார் 500 மோசடிக்காரர்களை ஆஸ்திரேலியாவுக்குள் நுழையமுடியாதபடி தடுத்திருந்ததாகவும், ஆஸ்திரேலியாவில் ஆபத்தான செயற்பாட்டில் ஈடுபடக்கூடும் என சந்தேகிக்கப்பட்ட 500 பேர் விமானம் ஏற முதல் தடுக்கப்பட்டதாகவும், ஆஸ்திரேலியாவை வந்தடைந்த சுமார் 4,500 பேருக்கு immigration clearance மறுக்கப்பட்டதாகவும் உள்துறை அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய நிதியாண்டில் 57,161 விசாக்கள் ரத்துச் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த நிதியாண்டில் சற்று அதிக எண்ணிக்கையிலானோர் தமது விசாக்களை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.