வீசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் 2019-ம் ஆண்டுக்குரிய உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்/கடவுச்சீட்டுகள் எவை என்ற புதிய பட்டியலை Henley Passport Index நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன்படி உலகின் அதிசக்தி வாய்ந்த கடவுச்சீட்டு என்ற பெருமையை ஜப்பான் கடவுச்சீட்டு பெறுகிறது. இதைப் பயன்படுத்தி 190 நாடுகளுக்கு வீசா இல்லாமல் சென்றுவரலாம்.
இரண்டாம் இடத்தில் சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா கடவுச்சீட்டுகள் காணப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி 189 நாடுகளுக்குச் செல்லலாம்.
மூன்றாம் இடத்தில் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் கடவுச்சீட்டுகள் காணப்படுகின்றன.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கடவுச்சீட்டுகள் 7ம் மற்றும் 8ம் இடங்களிலிருந்து 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை உலகின் அதிகசக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளுக்கான பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள நாடுகளின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
1. Japan — 190 (destinations)
2. Singapore, South Korea — 189
3. France, Germany — 188
4. Denmark, Finland, Italy Sweden — 187
5. Luxembourg, Spain — 186
6. Austria, Netherlands, Norway, Portugal, Switzerland, UK and US — 186
7. Belgium, Canada, Greece, Ireland — 184
8. Czech Republic — 183
9. Malta — 182
10. Australia, Iceland, New Zealand — 181