ஆஸ்திரேலியாவில் கல்வி கற்பதற்கென வழங்கப்பட்ட சுமார் 96,542 மாணவர் விசாக்கள், கடந்த 7 ஆண்டுகளில் ரத்துச் செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு முதல் 2017 டிசம்பர் வரையான காலப்பகுதியிலேயே இவ்விசாக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள், கொள்ளை, பாலியல் குற்றச்செயல்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்களில் குற்றவாளிகள் என இனங்காணப்பட்டவர்களின் மாணவர் விசாக்களே இவ்வாறு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Source: Department of Home Affairs Source: DoHA
2014-இல் அமுல்படுத்தப்பட்ட Character and General Visa Cancellation சட்டமூலத்தின்படி, நன்னடத்தை பரிசோதனை அடிப்படையில் கடந்த 7 ஆண்டுகளில் 96,542 பேரின் விசாக்கள் ரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.