ஆஸ்திரேலியாவிலுள்ள விசா நடைமுறைகளை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை அரசு கோரியுள்ளது.
நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் பாதுகாப்பு நலன்களுக்கேற்ப தற்போது நடைமுறையிலுள்ள விசா பொறிமுறையை இன்னும் நவீனமயப்படுத்துவது தொடர்பில் பொதுமக்கள் தமது கருத்துக்களை என்ற இணைப்பினூடாக அறியத்தரலாம்.
தற்போது 99 தனிப்பிரிவுகளின் கீழ் விசாக்கள் வழங்கப்படும் நிலையில் இதைச் சுருக்கி 10 பிரிவுகளாக்குவதற்கு அரசு ஆலோசித்துவருவதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் விசா நடைமுறை எப்படி இலகுவாக்கப்படலாம்? என்னென்ன அம்சங்களைக் கருத்திற்கொள்ள வேண்டும்? என்பன உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில், செப்டம்பர் 15ம் திகதி வரை மக்கள் தமது கருத்துக்களைச் சமர்ப்பிக்கலாம்.