ஜுலை 1ம் திகதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கான அனைத்து விசா கட்டணங்களும் உயர்கின்றன.
நாட்டின் பணவீக்கத்திற்கேற்ப அடுத்த 4 ஆண்டுகளில் 410 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டும் நோக்கில் விசா கட்டண உயர்வு அமையும் என கருவூலக் காப்பாளர் Treasurer Scott Morrison, தனது நிதிநிலை அறிக்கை தொடர்பில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார்.
இதனடிப்படையில் $10, $70, $135 என வெவ்வேறு தொகைகளுடன் விசா கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகின்றது.
குறிப்பாக மணத்துணையை நாட்டுக்குள் அழைப்பதற்கான விசா கட்டணம் $6,865 இலிருந்து $7000 ஆக அதிகரிக்கும் அதேநேரம் Employer Nomination மற்றும் Regional Sponsored Migration Schemes ஆகியவற்றின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கட்டணம் $3,600 இலிருந்து $3670ஆக அதிகரிக்கின்றது.
அனைத்து விசாக்களுக்குமான பழைய மற்றும் புதிய கட்டண விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

Source: DIBP

Source: DIBP