ஆஸ்திரேலிய விசா விண்ணப்ப முறைமை தனியார்மயப்படுத்தப்படுகிறது

ஆஸ்திரேலியாவின் புதிய விசா வர்த்தகத்திற்கு ஓர் உலகளாவிய டிஜிட்டல் தளத்தை வடிவமைத்து, செயல்படுத்துவதற்கு ஒரு தனியார் வழங்குனரை Australia தேடுகிறது. With the new ‘Global Digital Platform’, receiving and processing applications will become exclusively digital.

cc

Source: SBS

உலகளாவிய புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம், விசா விண்ணப்பங்களை பெறுவது, செயலாக்குவது போன்ற பணிகளை பிரத்தியேக தனியார் டிஜிட்டல் வழங்குநர் ஒருவரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

ஆஸ்திரேலியாவின் விசா விண்ணப்ப அமைப்புமுறையை தனியார்மயமாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், ஆஸ்திரேலியாவின் புதிய விசா வர்த்தகத்திற்கு ஓர் உலகளாவிய டிஜிட்டல் தளத்தை வடிவமைத்து, செயல்படுத்துவதற்கு ஒரு தனியார்  வழங்குனரைத் தேடுகிறது.

Home Affairs திணைக்களத்தின் உதவிச் செயலர் Andrew Kefford அண்மையில் இடம்பெற்ற ஒரு மாநாட்டில், 'உலகளாவிய டிஜிட்டல் தளம்' global digital platform ஒன்றை உருவாக்கும் தனது திட்டத்தை பகிர்ந்து கொண்டார்.  

குறுகிய கால மற்றும் எளிய விசாக்களுக்கான விண்ணப்பங்களை பெற்றுப் பரிசீலித்து விசாவை வழங்குவதற்கான ஒரு வணிக ரீதியான  அமைப்பு ஒன்றை வடிவமைத்து செயல்படுத்த ஒரு தனியார் அமைப்பை அரசு நியமிக்கவுள்ளது.
“We expect the successful provider to deliver a global digital platform that is capable of handling all visa products,” Kefford said.
முப்பது வருடங்கள் பழமையான இந்த விசா முறையினைச் சீர்த்திருத்த உத்தேசித்துள்ள அரசு, முதலில் குறுகிய மற்றும் எளிய விசாக்களுக்கே டிஜிட்டல் வழங்குநரை நியமித்தாலும், நீண்ட காலப்போக்கில் மற்றைய சிக்கலான அனைத்து விசா விண்ணப்பங்களும் குறிப்பிட்ட தனியார் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

“The government is highly open to exploring commercial opportunities ... provided that these don’t adversely impact on security, privacy or government’s reputation.

தற்போது குடிவரவுத் திணைக்களம், வருடமொன்றுக்கு சுமார் ஒன்பது மில்லியன் விசா விண்ணப்பங்களைப் பரிசீலிக்கின்றது. இன்னும் பத்து வருடங்களில் இது தொகை பதின்மூன்று மில்லியன் ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய விண்ணப்பங்களில் கால்வாசி காகித மூலமான விண்ணப்பப் படிவங்களாகவேயுள்ளன.  

அரசின் புதிய 'உலகளாவிய டிஜிட்டல் முறை' மூலம், விசா விண்ணப்பங்கள்  பிரத்தியேகமாக டிஜிட்டலாக மாறினாலும்  இராஜதந்திர மற்றும் அகதிகள் விசாக்கள் போன்ற சிறிய எண்ணிக்கையிலான சிறப்பு விசாக்களை திணைக்களமே தொடர்ந்தும் பரிசீலித்துச் செயற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The government plans to invite tenders in July 2018.

Home Affairs minister Peter Dutton told the National Press Club last week the proposal was driven by a need for modernisation, not a desire to privatise the process.
“The issue we have in this modern age is the volume … I don’t have the staff, and never will, to provide the scrutiny that’s required that we can now deliver through technology.”
The tender process would be open to Australian and foreign companies.

 

 

Share
Published 26 February 2018 10:48pm
By Praba Maheswaran

Share this with family and friends