ஆஸ்திரேலிய அரசு நாட்டின் விசா நடைமுறையை மாற்றயமைக்கத் திட்டமிடுவதாக கசியவிடப்பட்டுள்ள நாடாளுமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக PR-நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்கான நடைமுறையில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படலாம் எனவும், இதற்கான சட்ட முன்வடிவு அடுத்த வருட ஆரம்பத்தில் நாடாளுமன்றில் அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் Fairfax ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி நாட்டில் புதிதாக குடியேறிய ஒருவருக்கு ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை கொடுப்பதற்கு முதல் provisional visa எனப்படும் ஒரு தற்காலிக விசாவில் அவரை இங்கு வாழ அனுமதித்துவிட்டு, அதன்பின்னர் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படலாம் என குறிப்பிடப்படுகின்றது.
இதன்மூலம் புதிதாக நாட்டுக்குள் குடியேறியவர்கள் பெறும் அரச சலுகைகளைப் கட்டுப்படுத்தலாம் என அரசு கருதுவதாக அச்செய்தி மேலும் கூறுகின்றது.
எனினும் இவ்வாறானதொரு நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில், அது பல்லின சமூகத்தில் ஏற்றத்தாழ்வு மனப்பான்மையையும் பிரிவினையையும் உண்டுபண்ணும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.