நவம்பரில் தாக்கல் செய்யப்பட்ட இலங்கையர்களின் அகதி விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிப்பு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரி விண்ணப்பித்த அனைத்து இலங்கையர்களினதும் Onshore Protection (Subclass 866) விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Australia visa application

Flag of Australia , visa application form and passport on table Source: iStockphoto / mirsad sarajlic/Getty Images/iStockphoto

இதன்படி நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள(onshore) 50 இலங்கையர்கள் தமது Onshore Protection (Subclass 866) விண்ணப்பங்களை தாக்கல் செய்திருந்ததாகவும், இவ்விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த தரவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு முதல் சமர்ப்பிக்கப்பட்ட 8 இலங்கையர்களின் விண்ணப்பங்களும் கடந்த நவம்பர் 1ம் திகதியிலிருந்து 30ம் திகதி வரையிலான காலப்பகுதியில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

உள்துறை அமைச்சின் தரவுகளின்படி நவம்பர் மாதத்தில் மொத்தம் 1,643 புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் நாடுகளின் விவரங்கள் கீழ்வரும் பட்டியலில் தரப்பட்டுள்ளது.
2023-01-05_16-00-12.jpg
Credit: Homeaffairs

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 5 January 2023 4:03pm
Updated 5 January 2023 4:12pm
Source: SBS

Share this with family and friends