'ஆஸ்திரேலிய குடிவரவு முகாமில் ஒருவர் சராசரியாக 2 ஆண்டுகள் தடுத்துவைக்கப்படுகிறார்'

ஆஸ்திரேலியாவினால் நிர்வகிக்கப்படும் குடிவரவு தடுப்பு முகாம்களில் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் தடுத்துவைக்கப்படும் சராசரி காலப்பகுதி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக காணப்படுவதாக சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.

Detention ban

A doctor who was the head of medical services for a private contractor running Australian detention centres says the system is akin to 'torture'. Source: SBS

ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்புமுகாம்களில் உள்ளவர்கள் சராசரியாக 726 நாட்கள் அங்கு தடுத்துவைக்கப்படுவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தரவுகள் கூறுகின்றன.

இந்த ஆண்டு ஏப்ரல் இறுதிவரையான காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவிலுள்ள குடிவரவுத் தடுப்புமுகாம்களில் சுமார் 1414 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 61 வீதமானவர்கள் விசா ரத்துச்செய்யப்பட்ட நிலையில் அங்கு உள்ளார்கள் எனவும், 14 வீதமானவர்கள் சட்டவிரோத படகுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா வந்தவர்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது.

விசா ரத்துச்செய்யப்பட்ட நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 61 வீதமானவர்களில் பெரும்பாலானவர்கள் நடத்தை அடிப்படையில் விசா ரத்துச்செய்யப்பட்டவர்களே எனவும் தரவுகள் கூறுகின்றன.

ஆஸ்திரேலிய அரசு, ஒருவரை அவரது நன்நடத்தையின் அடிப்படையில்- அல்லது அவரால் நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் என்று உறுதிசெய்யப்பட்டதின் அடிப்படையில் - அல்லது குறிப்பிட்ட குழுக்கள் மற்றும் அமைப்புக்களோடு தொடர்புகளை கொண்டுள்ளார் என்று நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் - அவரது விசாவை ரத்துச்செய்துவிட்டு காலவரையறையற்ற தடுப்புக்காவலில் வைத்திருக்க முடியும் என்ற வகையில் இவர்கள் குடிவரவு தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

ஒருவரின் தடுப்புக்கால எல்லை அவரது வழக்கின் தன்மை, நடத்தை மற்றும் நாட்டின் பாதுகாப்பு உட்பட பல அம்சங்களில் தங்கியுள்ளதாகவும், தடுப்புக்காவல் காலத்தை குறைப்பதற்கான பல்வேறு வழிகள் தொடர்பில் தமது அரசு ஆராய்ந்துவருவதாகவும் லேபர் கட்சி தெரிவித்துள்ளது.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்
என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 11 August 2022 5:58pm
Updated 11 August 2022 6:22pm
Source: SBS

Share this with family and friends