ஆஸ்திரேலியாவில் ஜுலை 1 முதல் நடைமுறைக்குவரும் விசா மாற்றங்கள்!

புதிய நிதியாண்டு ஆரம்பித்துள்ள பின்னணியில் ஆஸ்திரேலியாவின் விசாக்களில் நடைமுறைக்குவரும் மாற்றங்களைப் பார்க்கலாம்.

Australia visa changes 2022-23 -SBS News

Australia visa changes 2022-23 Source: SBS News

Temporary skill shortage விசாக்கள்

Temporary skill shortage (TSS) subclass 482 விசா வைத்திருப்பவர்கள் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிப்பது எளிதாகிறது.

மார்ச் 31 நிலவரப்படி, ஆஸ்திரேலியாவில் 482 விசாக்கள் அல்லது அதனுடன் தொடர்புடைய 457 விசாக்களில் 52,440 பேர் இருந்தனர்.

ஜூலை 1 முதல், அந்த விசா வைத்திருப்பவர்கள்  Temporary Residence Transition (TRT) விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். தமது முதலாளியால் பரிந்துரைக்கப்படும் தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்கவும் வேலை செய்யவும் இது அனுமதிக்கிறது.

ஆனால் இந்த தேதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இந்நடைமுறை மூலம் விண்ணப்பிக்க முடியும்.

Temporary Residence Transition (TRT) விசாவிற்கு தகுதிபெறுபவர்கள் பெப்ரவரி 1 2020 க்கும் டிசம்பர் 14 2021 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஆகக்குறைந்தது ஒரு வருடம் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்திருக்க வேண்டும்.

Subclass 457 விசா வைத்திருப்பவர்களும், Short-term Skilled Occupation List (STSOL)இல் பொருத்தமான தொழில் இருக்கும்பட்சத்தில், இந்நடைமுறை ஊடாக விண்ணப்பிக்க முடியும்.
Two latest Australian visas which offer highly-skilled migrants.
Source: SBS

வயது வரம்பு விலக்கு

457 விசா வைத்திருப்பவர்களுடன் தொடர்புடையதான மற்றொரு மாற்றம், Temporary Residence Transition (TRT) மூலம் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கு வயதுக்கட்டுப்பாடு கிடையாது.

ஆனால் இச்சலுகை ஜூலை 1 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

வயது விலக்கு சலுகைக்குத் தகுதிபெற, 457 விசா வைத்திருப்பவர்கள் தமது விசாவை 18 ஏப்ரல் 2017 அல்லது அதற்குப் பிறகு பெற்றிருக்க வேண்டும்.

பெப்ரவரி 1 2020 க்கும் டிசம்பர் 14 2021 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஆகக்குறைந்தது ஒரு வருடமாவது அவர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்திருக்க வேண்டும்.

Temporary graduate விசா

ஆஸ்திரேலியாவிற்கான Temporary Graduate (subclass 485)  விசாக்களை வைத்திருந்தவர்கள் எல்லைக்கட்டுப்பாடு காரணமாக இங்கு வரமுடியாத நிலை காணப்பட்ட பின்னணியில், இவர்களது விசா கடந்த 2020 பெப்ரவரி மாதம் 1ம் திகதியன்றோ அல்லது அதற்குப் பின்னரோ காலாவதியாகியிருந்தால், அவர்கள் 1 ஜுலை 2022 முதல் மீண்டும் subclass 485 விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.

அவர்களது முன்னைய விசா எந்தளவு காலப்பகுதிக்கு வழங்கப்பட்டிருந்ததோ, அதேயளவு காலப்பகுதிக்கு இவ்விசாவை மீண்டும் பெறமுடியும். 

இதற்குத் தகுதிபெறுபவர்கள் 1 பிப்ரவரி 2020 முதல் 15 டிசம்பர் 2021 வரை ஆஸ்திரேலியாவுக்கு வெளியே இருந்திருக்க வேண்டும்.
The National Farmers Federation has called on the new Labor government to help improve worker availability to address the chronic labour shortages crippling the farming sector
The National Farmers Federation has called to help improve worker availability to address the chronic labour shortages crippling the farming sector. Source: AAP / LUKAS COCH

Working holiday maker விசா

கோவிட் பரவலையடுத்து சர்வதேச பயணிகளுக்கு ஆஸ்திரேலிய எல்லை மூடப்பட்டிருந்த காரணத்தால் working holiday makers பற்றாக்குறையால் ஆஸ்திரேலிய தொழில்துறைகள் பல பாதிக்கப்பட்டிருந்தன.

ஆனால் ஜூலை 1 முதல், துணைப்பிரிவு 462 விசா ஏற்பாட்டின் ஒரு பகுதியாக, பல நாடுகளைச் சேர்ந்த working holiday makers-க்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை வரம்பு 30 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இச்சலுகை 2022-23 நிதியாண்டிற்கு மட்டுமே பொருந்தும்.

working holiday makers விசா திட்டத்திற்குத் தகுதிபெறும் நாடுகளில் மொங்கோலியா மற்றும் பிரேசில் ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.

அதேநேரம் குறித்த விசாவுக்கு விண்ணப்பிக்கும் சில நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான வயது வரம்புகள் மற்றும் எண்ணிக்கை வரம்புகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதன்படி இத்தாலிய மற்றும் Danish குடிமக்களுக்கான வயது வரம்பு 30இலிருந்து 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Hungary, Austria மற்றும் Slovak Republic- ஐச் சேர்ந்தவர்களுக்கான எண்ணிக்கை வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share
Published 1 July 2022 12:08pm
Updated 1 July 2022 12:36pm

Share this with family and friends