ஆஸ்திரேலிய விசா கட்டணங்கள் உயர்கின்றன!

FAQ about citizenship delays

Source: Public Domain

ஜுலை 1ம் திகதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கான சில  விசா கட்டணங்கள்  உயர்கின்றன.

நாட்டின் பணவீக்கத்திற்கேற்ப  4 ஆண்டுகளில் 410 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டும் நோக்கில் விசா கட்டண உயர்வு அமையும் என கடந்த ஆண்டு கருவூலக் காப்பாளர் Treasurer Scott Morrison அறிவித்திருந்ததற்கிணங்க, இக்கட்டண உயர்வுகள் இவ்வருடமும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இதனடிப்படையில் $5, $10, $160 என வெவ்வேறு தொகைகளுடன் சில விசாக்களுக்கான கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகின்றது.

குறிப்பாக மணத்துணையை நாட்டுக்குள் அழைப்பதற்கான விசா கட்டணம் $7,000 இலிருந்து  $7160 ஆக அதிகரிக்கும் அதேநேரம் பெற்றோர் விசா subclass 103 மற்றும் Other family visas subclass 114, 115 -க்கான கட்டணம் $3,945 இலிருந்து $4,035 ஆக அதிகரிக்கின்றது.

இவ்வாறு கட்டணம் உயர்த்தப்படும்  விசாக்களுக்கான பழைய மற்றும் புதிய கட்டண விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
Visa fee
Source: DHA


 


Share
Published 30 June 2018 6:15pm
Updated 30 June 2018 6:19pm
Presented by Renuka


Share this with family and friends