செலுத்தப்படாத வரியை வசூலிக்க உதவ கூடுதல் நிதி ஒதுக்கீடு
குறைந்த மற்றும் நடுத்தர வருமான வரிச் சலுகை நீடிக்கப்படாது. அதாவது 2021-22 நிதியாண்டு வருமானவரி சமர்ப்பில் மட்டுமே $126,000க்கு கீழ் ஊதியம் பெறும் தொழிலாளர்கள் $1,500 வரை வரிச்சலுகை பெறுவார்கள். இதுவே இறுதியாக அமையும்.
மூன்றாம் நிலை வரிக்குறைப்பில் எந்த ஒரு மாற்றமும் இல்லை
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலிய வருமானவரித்துறை அலுவலகத்தின் வரி தவிர்ப்பு பணிக்குழுவை நீட்டிப்பதற்காக ஆண்டுக்கு $200 மில்லியன் கூடுதல் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
இதனால் எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் செலுத்தப்படாத வரி $2.8 பில்லியன் வசூலிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு சில புதிய அறிக்கையிடல் தேவைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அவர்களின் துணை நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் வரி நோக்கங்களுக்காக அவை எங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது உட்பட ஆஸ்திரேலிய வருமானவரித்துறை அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
அரச கொடுப்பனவுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு
பணவீக்கம், உயரும் வட்டி விகிதங்கள் மற்றும் மெதுவான ஊதிய வளர்ச்சி ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, அரச கொடுப்பனவுகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் சுமார் $33 பில்லியன் அதிகரிக்கப்படவுள்ளது.
ஊதியத்துடனான பெற்றோர் விடுப்பு 26 வாரங்கள் வரை நீட்டிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூலை முதல் 2026 ஆம் ஆண்டுக்குள் 26 வாரங்களை எட்டும் வகையில் இந்த அதிகரிப்பு ஆரம்பமாகவுள்ளது.
மேலும் கணவன் மனைவி இருவரும் பணிபுரியும் குடும்பங்களில் ஊதியத்துடனான பெற்றோர் விடுப்பை எவ்வாறு பிரிப்பது என்பதைத் தீர்மானிக்கவும் அனுமதி அளிக்கப்படும்.
ஊதியத்துடனான பெற்றோர் விடுப்பை அதிகரிப்பதற்கென நிதிநிலை அறிக்கையில் $530 மில்லியன் ஒதுக்கப்படுகிறது.
——————————————————————————-
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.