வியாபாரத் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கவோ அல்லது ஏற்கனவே இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தவோ விரும்பி ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்வதற்கு திட்டமிடும் மக்களுக்கு இந்த விசா வழங்கப்படுகிறது.
உலக வங்கியால் நடாத்தப்படும் Doing Business 2018 எனும் அண்மைய மதிப்பீட்டின்படி, ஆஸ்திரேலியா வர்த்தகம் செய்வதற்கான உலகின் மிக எளிமையான இடமாக விளங்குகிறது.
20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பொருளாதாரங்களை ஒப்பிடுகையில், ஆஸ்திரேலியா இப்போது உலகிலேயே நான்காவது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஒரு வணிகத்தை நிறுவுதல், வியாபார நோக்கமாக குறுகிய வருகைகளை ஏற்படுத்தல், ஒரு புதிய அல்லது ஏற்கனவே உள்ள வணிகத்தை நிர்வகித்தல் அல்லது ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்தல் போன்ற பல காரணங்களுக்காக விசாக்கள் வழங்கப்படுகின்றன.
ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்பும் வெற்றிகரமான வணிக உரிமையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு இரண்டு வழிகள் அல்லது ஏற்பாடுகள் உள்ளன.
ஒன்று - தற்காலிக விசா.
இரண்டாவது - நிரந்தர விசா.
ஆஸ்திரேலியாவுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், முதலில் குடிவரவுத் துறையின் இணையத்தை நன்கு பார்வையிட்டு விண்ணப்பிக்கவுள்ள விசாவுக்கான அடிப்படை வேலைகளை செய்தப்பின்னரே ஒரு குடிவரவுத்துறை முகவரை அணுகவேண்டும்.
பொதுவாகத் தென்னாசிய நாடுகளில், ஆஸ்திரேலியாவுக்கான வணிக விசா பற்றிய பிழையான தகவல்கள் வெளியிடப்படுவதுடன், நேர்மையற்ற முகவர்கள் மற்றும் பொறுப்பற்ற ஊடக வெளியீடுகள் வணிக விசா தேவைகள் பற்றித் தவறான தகவல்களை பரப்புகின்றன.
AUD 1.5 மில்லியன் சொத்துக்கள் மற்றும் AUD 3 மில்லியன் வணிக வருவாய் அல்லது ஆஸ்திரேலிய மூலதன நிறுவனத்தில் இருந்து குறைந்தது AUD 1 மில்லியன் நிதியளிக்கும் தகுதி வாய்ந்த வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கு (permanent business visa subclass 132) நிரந்தர வணிக விசா உப பிரிவு 132 உள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, தென் ஆஸ்திரேலியா மாநிலத்தில் முதலீடு செய்ய விரும்பினால், மற்ற மாநிலங்களை விட சற்று எளிதாக விசா பெறக்கூடியதாக இருக்கும்.
தற்பொழுது, வணிக விசா விண்ணப்பதாரர்களில் பெரும்பாலானோர் சீனாவிலிருந்து குடியேறுகின்றனர்.
Here are some important links to explore further information from .
Business Innovation and Investment visas
If you have business skills and want to set up and manage a new or existing business in Australia, take a look at the .
If you’re granted one of the provisional visas, it will be valid for four years and then you can apply for a