மெல்பன் Dandenong பிரதேச வீடொன்றில் gas heater மூலம் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி நான்கு வயது தமிழ் சிறுவன் ரித்திஷ் கிருஷ்ணநீதன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள பின்னணியில், தான் சமையலறையில் சமைத்துக்கொண்டிருந்துவிட்டு வந்து பார்த்தபோது மகன் தூங்கிக்கொண்டிருந்த அறைக்கு வெளியே பெருந் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்ததாகவும், தான் ஜன்னலை உடைத்தும், மகனைக்காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை என்றும் தாயார் நதியா கூறியுள்ளார்.
மகனை இழந்த கொடிய துயரில் மிகவும் பாதிக்கப்பட்ட தாய் இச்சம்பவம் குறித்து 7news-இடம் மேலும் கூறுகையில் - அறையை உடைத்துக் காப்பாற்றுவதற்கு தான் முயற்சித்துக்கொண்டிருந்தபோது உள்ளே மகனின் மெல்லிய அழுகை சத்தம் கேட்டதாகவும் சிறிது நேரத்தில் அந்த சத்தம் ஓய்ந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
விபத்து இடம்பெற்ற இந்த வாடகை வீட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் தாங்கள் புதிதாக குடிபுகுந்திருந்ததாகவும், smoke alarm பொருத்துவதற்காக சம்பந்தப்பட்ட தரப்புக்களை சில நாட்களுக்கு முன்னர் தொடர்புகொண்டபோது, கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக உடனடியாக அப்பணியை மேற்கொள்வது கடினம் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
இத்தீவிபத்திலிருந்து ரித்திஷின் 9 வயது சகோதரனும் 3 வயது சகோதரியும் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை கிருஷ்ணநீதன்-நதியா குடும்பம் கடந்த 2012ம் ஆண்டு இலங்கையிலிருந்து வந்து ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலில் கிறிஸ்மஸ் தீவிலும் பின்னர் அடிலெய்டிலும் தடுத்துவைக்கப்பட்ட இக்குடும்பம் சுமார் 9 வருடங்களாக bridging விசாவுடன் வாழ்ந்துவந்ததாகவும், பெர்த்திலிருந்து கடந்த மாதமே மெல்பன் வந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் இக்குடும்பம் 4 வயது ரித்திஷை இழந்தது மாத்திரமல்லாமல் இவர்களது உடைமைகளும் தீயில் எரிந்து நாசமாகின.
இதையடுத்து ரித்திஷின் இறுதிநிகழ்வுக்கும் இக்குடும்பத்திற்கான தங்குமிடம் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான செலவு போன்றவற்றுக்கென நிதிசேகரிப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
GoFundMe ஊடாக நடத்தப்படும் இந்நிதிசேகரிப்பினூடாக தற்போதுவரை சுமார் 85 ஆயிரம் டொலர்களுக்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Readers seeking support can contact Lifeline for 24-7 crisis support on 13 11 14, and Kids Helpline on 1800 55 1800 (for young people aged 5 to 25). More information is available at and .
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.