சிட்னியில் உல்லாச படகில் பயணம் செய்த சிலருக்கு Omicron தொற்று?

கொரோனா வைரஸ் குறித்து டிசம்பர் மாதம் 8ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Side view of Sydney Harbour bridge Opera House and city CBD at sunset.

面對加息大環境, 投資者應當如歌部署? Source: AAP

  • வெள்ளிக்கிழமை இரவு சிட்னி Harbour boat cruise-இல் இருந்தவர்களில் ஐவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அதிலிருந்த சுமார் 140 பேரைத் தொடர்பு கொள்ள சுகாதார அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஐவரில் இருவருக்கு Omicron தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
  • Omicron திரிபானது ஏற்கனவே பரவியுள்ள  கோவிட்-19 திரிபுகளைக் காட்டிலும் கடுமையான நோயை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை என்றபோதிலும் இன்னும் எச்சரிக்கை தேவை என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
  • நாட்டிலுள்ள 5-11 வயது வரையிலான குழந்தைகளுக்கு Pfizer தடுப்பூசியை வழங்குவது தொடர்பிலான  இறுதி ஒப்புதல் குறித்து ATAGI இந்த வார இறுதியில் தனது முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ATAGI-ஆல் அங்கீகரிக்கப்பட்டவுடன்,  5-11 வயது வரையிலான குழந்தைகள் தமக்கான தடுப்பூசிகளை, புதிய ஆண்டில் பெற்றுக்கொள்ளமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,312 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 5  பேர் உயிரிழந்துள்ளனர். 

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 403 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்

ACT- இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 8 பேருக்கும், குயின்ஸ்லாந்தில் இருவருக்கும், NT-இல் இருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published

Updated



Share this with family and friends