Latest

சர்வதேச விமானப்பயணிகளுக்கான முகக்கவச கட்டுப்பாடு நீக்கம்!

கொரோனா வைரஸ் குறித்து செப்டம்பர் மாதம் 9ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

INTERNATIONAL STUDENTS ARRIVAL

International students wear face masks as they arrive at Sydney Airport in Sydney. Source: AAP / BIANCA DE MARCHI/AAPIMAGE

விக்டோரியாவில் 41 பேர், குயின்ஸ்லாந்தில் 6 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 41 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இன்று வெள்ளிக்கிழமைக்குப் பிறகு தினசரி கோவிட் அறிக்கைகளையும் எண்ணிக்கைகளையும் மாநிலங்களும் பிராந்தியங்களும் வழங்காது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் இன்றையதினமே கோவிட் அறிக்கையை வழங்கவில்லை

செப்டம்பர் 16 முதல் வாராந்திர அறிக்கையை மாநிலங்களும் பிராந்தியங்களும் வெளியிடுவார்கள்.
இந்த மாத தொடக்கத்தில் நடந்த மாநில மற்றும் பிராந்திய சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவரும் சர்வதேச விமானப்பயணிகளுக்கான முகக்கவச கட்டுப்பாட்டை இன்று (செப்டம்பர் 9) நள்ளிரவு 12.01 முதல் ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது.


சர்வதேச விமானங்களில் முகக்கவசம் அணிய வேண்டுமென்ற நிபந்தனை ஜனவரி 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.



அதேநேரம் உள்நாட்டு விமானப்பயணிகளுக்கான முகக்கவச கட்டுப்பாடும் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.


கோவிட்-19 தொற்றுக்கண்டவர்களில், நோய் அறிகுறியற்றவர்கள் ஏழு நாட்களுக்குப் பதிலாக, ஐந்து நாட்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்தப்பட வேண்டும். இது இன்றிலிருந்து நடைமுறைக்கு வருகிறது

நோய் அறிகுறியற்றவர்கள் ஏழு நாட்கள் வரை அதிக ஆபத்துள்ள இடங்களுக்குச்செல்ல அனுமதிக்கக்கூடாது என்று ஆஸ்திரேலிய சுகாதார பாதுகாப்பு முதன்மைக் குழு (AHPCC) கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.

நோய்த்தொற்று பரவக்கூடிய அதிக ஆபத்துள்ள இடங்களில் மருத்துவமனை வளாகங்கள், பொது கிளினிக்குகள், தனியார் சுகாதார மையங்கள், முதியோர் பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு மையங்கள் ஆகியவை அடங்கும்.
இன்று முதல், மேற்கு ஆஸ்திரேலியர்கள் டாக்சிகள் மற்றும் ரைட்ஷேர் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை. மற்ற மாநிலங்களும் இதை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 2,106 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 41 பேர்மரணமடைந்தனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 1,426 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 995 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 569 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டஸ்மேனியாவில் புதிதாக 176 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ACT- இல் புதிதாக 137 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

NT- இல் புதிதாக 69 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும்பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதைஅறிந்துகொள்ள:
உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரைசெல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்
என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 9 September 2022 4:39pm
Updated 9 September 2022 5:04pm
Source: SBS


Share this with family and friends