வரலாறு காணாதவகையில் புவி 2023 ஆம் ஆண்டு வெப்பமடைந்ததா?

உலகவெப்பநிலை வரலாறு காணாத அளவிற்கு 2023 ஆம் ஆண்டு அதிகரித்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வெப்ப நிலை பதிவு செய்யத்தொடங்கிய காலந்தொட்டு பார்க்கும்போது 2023 ஆண்டு -warmest on the record – மிகவும் வெப்பமான வருடம் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று ஆராய்வோம்.

Concept illustration Global warming around the world is about to be burned by human hands (3D image)

Concept illustration Global warming around the world is about to be burned by human hands (3D image) Source: Moment RF / Surasak Suwanmake/Getty Images

மனிதர்களால் காலநிலை மாற்றம் ஏற்படுவது (human caused climate change), மற்றும் இயற்கையாக ஏற்படும் El Niño என்ற மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

Fossil fuel என்ற புதைபடிம எரிபொருள்- பெட்ரோல், நிலக்கரி, எரிவாயு என்பவற்றை மனிதன் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன்னர் நிலவிய காலநிலையோடு ஒப்பிடும்போது இப்போது 1.5 பாகை (சென்டிகிரேட்) வெப்பம் அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவிக்கிறது. Sea Surface Temperature -கடலின் மேற்பரப்பின் வெப்பமும் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

இத்தகைய காரணங்களினால் காலநிலை தொடர்பான சர்வதேச இலக்குகளை அடைவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

100 வருடங்களுக்கு முன் இருந்த வெப்ப நிலையுடன் ஒப்பிடும்போது இப்போது புவி வெப்பம் மிக அதிகரித்திருக்கிறது. மனிதர்களின் செயல்பாடுகள் காரணமாக கரியமலவாயுவின் வெளியேற்றம் அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முன்னர் யாரும் எதிர்பாராத விதத்தில் புவி வெப்பம் அதிகரித்ததாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. மனிதர்களின் செயல்பாடுகளுக்கு மேலதிகமாக El Niño என்ற காலநிலை நிகழ்வு உருவானதும் இதற்குப் பிரதான காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. 
Heat wave in USA concept, 3D rendering
Heat wave in USA concept, 3D rendering on white background Source: iStockphoto / natatravel/Getty Images

El Niño என்றால் என்ன என்னவென்று பார்ப்போம்.

Pacific சமுத்திரத்தின் கிழக்குப்பகுதியில் கடல்நீரின் மேற்பரப்பு வெப்பநிலை சராசரிக்கு மேல் அதிகரிக்கும் நிலையை El Niño என்று சொல்கிறார்கள். இதன்காரணமாக மழைவீழ்ச்சி குறைவடைவதும், வெப்பம் அதிகரிப்பதும், பனிப்புயல் அதிகரிப்பதும், பருவக்காற்று வீசுவது தாமதமாவதும், காட்டுத்தீ நிகழ்வுகள் அதிகரிப்பதும் நடப்பதாக காலநிலை அவதானிகள் கூறுகிறார்கள்.

இதன் தாக்கம் இவ்வாண்டின் (2024) முற்பகுதியில் மேலும் உணரக்கூடியதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

கரிபியன் கடலில் வாழும் sea sponge என்ற கடல்வாழ் பிராணியை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு ஒன்று தொடர்ந்து ஆராய்ந்து வந்ததில் புவி வெப்பம் தொடர்பான திடமான சில தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இந்த குழு தெரிவித்திருக்கிறது. 300 தொடக்கம் 400 வருடங்கள் வரை உயிர்வாழக்கூடிய இந்த sea sponge இன் உட்பகுதி புவி வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க பல வேதியல் மாற்றங்களுக்கு உட்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். இவை கடல்நீரின் வெப்பத்தைக் கணிக்கும் thermometer ஐப் போல செயல்படுவதாக தலைமை விஞ்ஞானி, பேராசிரியர் Malcolm McCulloch குறிப்பிடுகிறார். இந்த உயிரினங்கள் பல ஆண்டு காலம் உயிர்வாழ்வதால் அவற்றின் உடல் layer போல பல படிமங்களாக அமைந்திருப்பதாகவும் இந்த layers களைக்கொண்டு 1700 ஆம் ஆண்டு தொடக்கம் இருந்த வெப்ப அளவை மதிப்பிடமுடியும் என்றும் அவர் கூறுகிறார். 
Soft corals and sponges near Wetar Island in the Banda Sea, Indonesia
Soft corals and sponges near Wetar Island in the Banda Sea, Indonesia. The coral reefs off of Indonesia are the most diverse in the world. Credit: Stuart Westmorland/Getty Images

Puerto Rico கடற்கரைப்பிரதேசங்களில் செய்யப்பட்ட இந்த ஆராய்ச்சி மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட ஆதரவுகள் என்ன சொல்கிறதென்றால் pre industrial period எனப்படும் தொழிற்சாலைகள் நிறுவப்படுவதற்கு முன்னதான கால நிலையுடன் ஒப்பிடுகையில் புவி வெப்பம் ஏற்கனவே 1.5 பாகைக்கு மேல் அதிகரித்திருப்பதாகவும், இந்த தசாப்தத்தின் இறுதிக்கு முன் இது 2 பாகையாக அதிகரிக்கக் கூடும் என்றும் சொல்லப்படுகிறது. இது ஒரு அபாய எச்சரிக்கையாக பார்க்கபடுகிறது.

கடந்த ஆண்டில் (2023) ஏற்பட்ட வெப்ப அதிகரிப்பின் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த வெப்ப அதிகரிப்பு சர்வதேசரீதியாக நிகழ்ந்துள்ளது என்பதுதான். இதன்காரணமாக காட்டுத்தீ மற்றும் heat waves - அனல் காற்று அல்லது வெப்ப அலை என்பன கனடா மற்றும் அமெரிக்காவில் தீவிரமடைந்ததுடன் ஆப்ரிக்காவின் கிழக்குப் பிராந்தியத்தில் நீண்ட கால வரட்சியை ஏற்படுத்தியது. மட்டுமல்ல, அதைத்தொடர்ந்த பெருவெள்ளம் போன்ற நிகழ்வுகள் உலகின் பல பகுதிகளில் ஏற்பட்டமையும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இவை புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல; கடும் வெப்பம் வழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிப்பதையே இது காட்டுகிறது என்று Secretary General of the World Meteorological Organisation பேராசிரியர் Petteri Taalas கூறுகிறார்.

புவிவெப்பம் அதிகரிப்பதை காலநிலை மாற்றங்கள் தெரிவிக்கும் அதே வேளையில் பின்வரும் நிகழ்வுகளும் அதையே உறுதிப்படுத்துகின்றன.

Melting Glacial Icebergs by Ilulissat Icefjord in Fog, Disko Bay, Greenland
Greenland, Ilulissat, Blue ice face of melting glacial iceberg drifting in Disko Bay at edge of Ilulissat Icefjord on summer evening Credit: Paul Souders/Getty Images
 * தென்துருவப் பிரதேசங்களில் sea- ice எனப்படும் பனிப்பாறைகளின் உருவாக்கம் வீழ்ச்சியடைந்து வருகிறது.

* தென்மேற்கு அமெரிக்கா, ஐரோப்பிய Alps மலைத்தொடர்பகுதி ஆகிய பிரதேசங்களில் மலைத்தொடர்களில் உருவாகும் glacier என்ற பனிக்கட்டி பரவல் குறைந்துள்ளது, கடலின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

* கடல் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை அதிகரித்தது. இதன் காரணமாக marine heatwaves- கடல்மேற்பரப்பில் வெப்ப அலை உருவானது என்று பல நிகழ்வுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

கடல் மேற்பரப்பு நீரின் வெப்பம் வளிமண்டலத்திற்குள் புகக்கூடும் என்பதாலும் El Niño வின் கணிக்கமுடியாத விளைவுகள் காரணமாகவும் 2024 ஆம் ஆண்டு 2023 ஐவிட வெப்பம் அதிகமான ஆண்டாக இருக்கக்கூடும் என்று அமெரிக்காவின் Climate scientists at Berkeley Earth a science organisation அமைப்பின் டாக்டர் Zeke Hausfather கூறுகிறார்.

புவிவெப்பம் 1.5 பாகை சென்ரிகிரேட்டிற்கு அதிகமாக அதிகரிக்காமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு 2015 இல் 200 நாடுகள் கலந்துகொண்ட பாரிஸ் ஒப்பந்தத்தில் இணக்கம் காணப்பட்டது. இது 20 அல்லது 30 வருட இலக்கு ஆகும். ஆனால் கடந்த ஆண்டில் இந்த இலக்கு எட்டப்படவில்லை. குறிப்பிட்ட ஒரு வருடத்தில் இந்த இலக்கு மீறப்படுவதை ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது என்று கொள்ளமுடியாது என்பது பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால் நாம் சென்று கொண்டிருக்கும் பாதை கவலையளிப்பதாக இருக்கிறது என்பதையே இது சுட்டிக்காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

வெப்பம் அதிகரிப்பது 1900 களின் பின்னர்தான் ஏற்பட்டுள்ளது என்பது பொதுவான கருத்தாக இருந்தபோதும் அதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னதாகவே இந்த அதிகரிப்பு நிகழத் தொடங்கியிருப்பதாக ARC centre of Excellence for Climate science ANU Dr. Georgy Falster கூறுகிறார்.

கடந்த ஆண்டு (2023) நடந்த வெப்ப அதிகரிப்பு கடந்தகால வரலாற்றுப்பதிவுகளை climate records தவிடுபொடியாக்கியிருக்கிறது என்று Deputy Director of the Copernicus Climate Change service Dr. Samantha Burgess கூறுகிறார்.
 
COP28 UNFCCC Climate Conference: Day Thirteen
DUBAI, UNITED ARAB EMIRATES - DECEMBER 13: Delegates applaud after a speech by Sultan Ahmed Al Jaber (C), President of the UNFCCC COP28 Climate Conference, during a plenary session on day thirteen of the UNFCCC COP28 Climate Conference on December 13, 2023 in Dubai, United Arab Emirates. The conference has gone into an extra day as delegations continue to negotiate over the wording of the final agreement. The COP28, which was originally scheduled to run from November 30 through December 12, has brought together stakeholders, including international heads of state and other leaders, scientists, environmentalists, indigenous peoples representatives, activists and others to discuss and agree on the implementation of global measures towards mitigating the effects of climate change. (Photo by Fadel Dawod/Getty Images) Credit: Fadel Dawod/Getty Images
கடந்த ஆண்டு (2023) நடந்த COP 28 உச்சிமாநாட்டில் முதன்முறையாக பெட்ரோல் உருவாக்கப்படும் fossil fuel பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவேண்டும் என்று அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த பின்னணியில் தற்போதைய தரவுகள் வெளிவந்துள்ளன. Fossil fuels -புதைபடிம எரிபொருளைக் கட்டுப்படுத்த அங்கத்துவ நாடுகள் என்னசெய்யவேண்டும் என்பதுபற்றி திட்டவட்டமாக COP28 மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்படாவிட்டாலும் கூட renewable power- புதுப்பிக்க வல்ல ஆற்றல் மற்றும் electric vehicles -மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் என்பன தொடர்பாக ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் நல்ல ஆரம்பமாகும்.

 உலக நாடுகள் ஒத்துக்கொண்ட 1.5 பாகையை மீறி 1.6 பாகையாக வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆனாலும் மனித செயல்பாடுகள் காரணமாக 3 பாகை வெப்ப அதிகரிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலையை புதுப்பிக்க வல்ல ஆற்றல் மற்றும் மின்சார வாகனங்கள் தடுக்கக் கூடும் என்று a senior lecturer in climate science at Imperial College London டாக்டர் Friederike Otto கூறுகிறார்.


Share
Published 21 February 2024 1:51pm
By R.Sathiyanathan
Source: SBS

Share this with family and friends