இந்தியா- ஆஸ்திரேலியா இடையே புதிய நேரடி விமான சேவை ஆரம்பமாகிறது!

ஆஸ்திரேலியாவுக்கும் தென்னிந்திய நகரொன்றுக்குமான முதல் நேரடி விமான சேவை எதிர்வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

콴타스/ Qantas

Qantas Source: Supplied / Supplied / Qantas

இந்தியாவின் பெங்களூருக்கும் சிட்னிக்கும் இடையிலான நேரடி விமான சேவையை எதிர்வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக ஆஸ்திரேலியாவின் பிரபல விமான சேவையான Qantas அறிவித்துள்ளது.

இந்தப் புதிய சேவை, ஆஸ்திரேலியாவுக்கும் பெங்களூருக்குமான தற்போதைய விமானப் பயண நேரத்திலும் பார்க்க மூன்று மணி நேரம் குறைவானது என்றும், பெங்களூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகள் இந்த விமான சேவையினால் மேலும் வலுப்பெறும் என்றும் Qantas தெரிவித்துள்ளது.

அதேநேரம் Qantas மற்றும் IndiGo நிறுவனங்களுக்கு இடையிலான codeshare ஒப்பந்தத்தின்கீழ் பெங்களூரிலிருந்து மும்பை, கோவா, கொல்கத்தா மற்றும் சென்னை உட்பட பதினொரு இடங்களுக்கான விமானசேவைகளையும் செப்டம்பர் 14 முதல் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அடுத்துவரும் மாதங்களில் இச்சேவை இந்தியா முழுவதும் 50 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

IndiGo மூலம் இயக்கப்படும் Qantas விமானங்களில், ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவில் உள்ள 11 புதிய இடங்களுக்கும் இப்போது பயணத்தை முன்பதிவு செய்யலாம்;.

இதேவேளை ஏற்கனவே உள்ள மெல்பன்-டெல்லி நேரடி விமானசேவையைப் பயன்படுத்துபவர்கள் டெல்லியிலிருந்து Amritsar (ATQ), Kochi (COK)
ஆகிய இடங்களுக்குச் செல்வதற்கான சேவைகளையும், IndiGo-உடன் இணைந்து Qantas நிறுவனம் ஆரம்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Qantas and IndiGo
Qantas and IndiGo Credit: Qantas and IndiGo
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்
என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

Share
Published 1 September 2022 4:29pm
Updated 1 September 2022 4:32pm
Source: SBS

Share this with family and friends