கிறிஸ்மஸ் புதுவருட பண்டிகைக் காலத்தில் பரிசுப்பொதிகள் மற்றும் இணையம் மூலம் கொள்வனவு செய்த பொருட்களின் பெயரால் இடம்பெறும் மோசடிகள் கடந்த வருடத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக நீங்கள் வீட்டிலில்லாத காரணத்தால் உங்களது பெயருக்கு வந்த ஒரு பொதியை கையளிக்க முடியவில்லை என்ற மின்னஞ்சல் Australia Post மற்றும் FedEx போன்ற நிறுவனங்களின் பெயரால் பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக மோசடி இடம்பெறுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இம்மோசடி தொடர்பில் இதுவரை தமக்கு 4300 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இதில் 350 பேர் தமது வங்கி விபரம் உள்ளிட்ட தரவுகளை மோசடிக்காரர்களிடம் கொடுத்து ஏமாந்துள்ளதாகவும் The Australian Competition and Consumer Commission தெரிவித்துள்ளது.
எனவே 'undeliverable package' என்ற போர்வையில் வரும் மின்னஞ்சல்களைத் திறக்க வேண்டமென The Australian Competition and Consumer Commission அறிவுறுத்தியுள்ளது.