சுமார் 50 சதவீதமான மக்கள், முழுமையாக மின்சாரத்தால் அதாவது முழுமையாக பட்டரியால் இயங்கும் electric vehicles-ஐ வாங்க விரும்புவதாக கணிப்புகள் சொல்கின்றன. ஆனால் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களால் மட்டுமே electric கார்களை வாங்குமளவு பொருளாதார வலிமையுடன் உள்ளனர்.
Electric vehicles தொடர்பான அரசின் நிலைப்பாடு குறித்து பிரதமர் Scott Morrison சில தினங்களுக்கு முன் சில அம்சங்களை அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவித்தல் காரணமாக பலரும் electric vehicles-ஐ வாங்கக் கூடிய சூழல் உருவாகுமா என்ற கேள்வி எழுகிறது.
Glasgow நகரில் நடைபெற்ற COP 26 சர்வதேச காலநிலை உச்சிமாநாட்டில் பிரிட்டன் உட்பட மற்றும் சில நாடுகள், 2035 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெட்ரோலால் இயங்கும் கார்களின் விற்பனையை முற்றாக நிறுத்தப்போவதாகத் தெரிவித்திருக்கின்றன. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுள் சில இந்த இலக்கை 2040 இல் எட்ட சங்கற்பம் கொண்டுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றன. இந்த இலக்கை அதற்கு முன்னரே எட்டமுடியும் என்றும் சில நாடுகள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றன. ஆனால் ஆஸ்திரேலியாவின் இலக்கு என்ன? விடை தெரியாத கேள்வி இது.

聯合國氣候變化峰會最終達成協議。 Source: AAP/PA
‘ஓட்டப்பந்தயம் ஆரம்பித்து பலரும் பாதி தூரம் ஓடிவிட்ட நிலையிலும் நாம் இன்னும் start line என்ற ஆரம்பக் கோட்டிலேயே நின்று கொண்டிருக்கிறோம்’ என்று அவதானிகள் மற்றும் சுற்றாடல் தொடர்பான ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
‘2050இல் Zero emissions என்ற நிகர பூஜ்ய கரியமில வாயு வெளியேற்றத்தை உறுதி செய்யும் வகையில் Electric Vehicles-ஐ charge செய்யும் கட்டமைப்பை உருவாக்க அரசு 250 மில்லியன் டாலர்களைச் செலவழிக்கும்’ என்பதுதான் பிரதமர் விடுத்துள்ள செய்தி. ‘Electric vehicles-ஐ மக்கள் வாங்க அவர்களை நிர்பந்திப்பது அரசின் கொள்கையல்ல’ என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இருந்தபோதும், 2019 தேர்தல் பிரச்சாரங்களின்போது Labour கட்சி முன்வைத்த ‘2030 இல் சாலைகளில் ஓடும் வாகனங்களுள் 50 சதவீதம் electric vehicle’ என்ற இலக்கை ‘வார இறுதிப் போர்’ a war on the weeekend’* என்று அப்போது பரிகாசம் செய்த பிரதமர் Scott Morrison, ‘தானும் காலநிலை மாற்றம் பற்றி கரிசனை உள்ளவர்தான்’ என்பதைக் காட்டிக்கொள்ள இப்போது Labour இன் அதே கொள்கையைச் சற்று தூசுதட்டி முன்வைத்திருக்கிறார் என்பது நகைமுரண்.

Prime Minister Scott Morrison tours the Toyota Hydrogen Centre in Altona, Melbourne, Tuesday, November 9, 2021. Source: AAP
*எந்த திட்டமிடலும் ஆயத்தமும் இல்லாமல் ஒரு முக்கியமான பணியை வார இறுதியில் நேரம் கிடைத்தால் செய்துகொள்ளலாம் என்று நினைக்கும் மனப்பான்மையை ‘a war on the weekend என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
அரசின் அறிவித்தல் விரக்தியை ஏற்படுத்துவதாகவும் electric vehicles-ஐ பலரும் வாங்க வழிவகுக்கக்கூடியதாக வரிச்சலுகைகள், ஊக்கத்தொகை, வருடாந்த விற்பனை இலக்குகள் என்பன பற்றி எந்தவொரு அறிவிப்பும் அதில் இல்லை என்றும் சுற்றாடல் துறை ஆர்வலர்களும் electric vehicles-ஐ வாங்க ஆர்வம் காட்டிவரும் பொதுமக்களும் தெரிவிக்கிறார்கள்.
‘Electric vehicles-ஐ வாங்கவிரும்பும் ஒருசிலருக்காக பொதுமக்களின் வரிப்பணத்தை எடுத்து தாரளமாக மானியங்களையோ வரிச்சலுகைகளையோ ஒரு சிலருக்கு வழங்குவது நியாயமாகாது’ என்பது பிரதமரின் வாதமாகும். ஆனால் electric vehicles-ஐ வாங்க, போதுமான சலுகைகளை வழங்காமல் 50000 charging station களை அமைக்கப்போவதாக பிரதமர் சொல்வது putting the cart before the horse ‘குதிரைகளுக்கு முன்னால் வண்டியைக் கட்டுவதற்கு’ சமமானது என்று இந்த துறையிலுள்ளவர்கள் அங்கலாய்க்கிறார்கள்.
ஏன் electric vehicles-ஐ எல்லோராலும் வாங்கமுடியவில்லை என்று பலரும் கேட்கக்கூடும். விருப்பமிருந்தும் ஏன் பலராலும் electric vehicles-ஐ இங்கு வாங்கமுடியவில்லை என்று பார்த்தால் பிரதான தடையாகவிருப்பது அவற்றின் விலைகள் தான்.

A close-up of an electric car recharging its batteries. Source: Getty
ஆஸ்திரேலியாவில் ஒரு Tesla காரின் விலை இப்போது 73000 டாலர்கள் தொடக்கம் ஒரு லட்சத்து நாற்பத்துநாலாயிரம் டாலர்கள் வரை. இந்த விலை பெரும்பான்மை மக்களுக்கு கட்டுப்படியானதல்ல என்பதுதான் உண்மை. 30000 டாலர்களுக்கும் 60000 டாலர்களுக்கும் இடைப்பட்ட விலைகளில் இங்கு electric vehicles வாங்க விரும்புபவர்களுக்கு போதுமான choice- தெரிவுகள் இல்லை. இந்த விலையைப் பிரிட்டிஷ் பவுண்ட்களில் மாற்றிப்பார்த்தால், சுமார் 16000 தொடக்கம் 30000 பவுண்ட்களுக்கு 32 வேறுபட்ட brand electric கார்களை அங்கு வாங்கமுடியும். எனவே ஏன் இங்கு போதுமான choices- தெரிவுகள் இல்லை என்று சிலர் அங்கலாய்க்கின்றனர்.
உலகிலேயே இப்போது மிகப் பெரும் எண்ணிக்கையில் electric கார்களை விற்கும் நிறுவனம் Volkswagen. கடந்த வருடம் Volkswagen சர்வதேசரீதியாக இரண்டு லட்சத்திற்கும் அதிகமான electric கார்களை விற்பனை செய்திருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் ஒரு காரைக்கூட அது விற்பனை செய்யவில்லை. ஏன் என்றால் Volkswagen, electric கார்களை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்ய மறுக்கிறது. ‘ஆஸ்திரேலியாவின் சுற்றாடல் தொடர்பான கொள்கை உறுதியானதாக இல்லை; ஐரோப்பிய நாடுகள் எடுத்துள்ள காத்திரமான கொள்கைகள் காரணமாக அங்கு மக்களுள் பெரும்பான்மையினர் electric கார்களை வாங்கமுடிகிறது. எங்களுக்கு சந்தைவாய்ப்பும் demand உம் எங்குஅதிகமாக இருக்கிறதோ அங்குதான் நாம் வாகனங்களை விற்கமுடியும்; வருடாந்தம் 100 கார்களை ஆஸ்திரேலியாவில் விற்க நாம் நமது வளங்களை ஈடுபடுத்த எமது தாய் நிறுவனமான Volkswagen Germany தயாராக இல்லை’ என்று Volkswagen Australia மேலாளர் Michael Bartsch கூறுகிறார்.
புதிய electric கார் மாடல்களை அறிமுகம் செய்யும் தயாரிப்பாளர்கள் யாரும் ஆஸ்திரேலியாவின் பக்கம் திரும்பிப் பார்ப்பது கூட இல்லை. ‘பல நாடுகளில் யாரும் வாங்க முன்வராத காலாவதியான தொழில் நுடப்தைப்பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பெட்ரோல் கார்களை குவிக்கும் third world dumping ground ஆக ஆஸ்திரேலியா இருக்கிறது. அங்கு electric கார்களை மக்கள் வாங்க, போதுமான incentives-ஊக்குவிப்பு இல்லை’ என்பதே அவர்களது கருத்தாக இருக்கிறது.

DRESDEN, GERMANY - JUNE 08: A Volkswagen employee demonstrates the charging of a Volkswagen ID.3 electric car. Source: Photo by Sean Gallup/Getty Images
ஐரோப்பிய நாடுகளில் ஒரு கார் உற்பத்தியாளர் எத்தனை electric கார்களை விற்பனை செய்கிறார் என்பதைப் பொறுத்து carbon credit என்ற கொடுப்பனவு அவருக்கு வழங்கப்படுகிறது. இந்த ஊக்குவிப்பு இங்கு இல்லை.
அத்தோடு ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல் கார்கள் வெளியிடும் carbon emissions இற்கு உச்ச பட்ச வரையறை இருப்பதாலும் இதைப் பூர்த்தி செய்வதில் சிரமங்கள் இருப்பதாலும் பல உற்பத்தியாளர்கள் electric vehicles-ஐ உற்பத்திசெய்வதிலும் விற்பனை செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அப்படியான திட்டமொன்று இங்கு நடைமுறையில் இல்லை.
Hyundai நிறுவனத்தின் ionic electric elite என்ற வாகனத்தின் ஆஸ்திரேலிய விலை 50000 டாலர்களாகும். இந்த வாகனத்தின் திறன் Hyundai இன் பெட்ரோல் வாகனமாகிய i30க்கு சமமானது. i30 இன்விலை இங்கு 30000 டாலர்கள். ஆகவே திறனில் அல்லது ஆற்றலில் வேறுபாடு இல்லாத electric கார் ஒன்றை ஏறக்குறைய இரண்டு மடங்கு விலைகொடுத்து வாங்க பலரும் முன்வருவதில்லை. கடந்த ஆண்டு இங்கு Hyundai ionic களை வாங்கியவர்கள் 500 பேர் மட்டுமே. ஆகவே பெட்ரோல் வாகனத்திற்கு சமமான ஆற்றல் உள்ள ஒரு electric வாகனத்திற்கு அதிகபட்சமாக 10 சதவீத த்திற்குமேல் மேலதிகமாக செலவழிக்க இங்கு பலரும் தயாராக இல்லை.

Electric vehicles Source: AAP
ஆஸ்திரேலியாவில் நிலைமை இப்படி இருக்கிறது எனில், ஏனைய நாடுகளில் நிலைமை எப்படி இருக்கிறது என்று ஆராய்வோம்.
Electric வாகனங்கள் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலும் பெருமளவில் விற்பனையாகின்றன. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் electric vehicles வாங்குவோருக்கு பல நிதிச்சலுகைகளையும் வரிச்சலுகைகளையும் வழங்குகின்றன. இதனால் electric கார்களின் விலை பெட்ரோல் கார்களின் விலையைவிட மிக சொற்ப அளவிலேயே அதிகமாகவிருக்கிறது. பழைய பெட்ரோல் கார் ஒன்றை trade in என்ற முறையில் கொடுத்து electric காருக்கு மாறுவோருக்கு 18000 டாலர்களை பிரான்ஸ் கொடுக்கிறது. அமரிக்கா, 2030 இல் விற்பனையாகும் கார்களுள் 50 சதவீதம் electric vehicles என்ற இலக்கை நோக்கி நகர்கிறது. Austria, China, Denmark, Netherlands, Portugal, Korea Spain போன்ற நாடுகளும் தங்களது இலக்குகளை அறிவித்திருக்கின்றன. Zero emissions என்ற இலக்கை 2050 இல் அடைய 2030 அளவில் சாலைகளுள் ஓடும் கார்களுள் 75 சதவீதமானவை electric vehicles ஆக இருக்கவேண்டும் என்ற இலக்கு COP26 மாநாட்டில் எட்டப்பட்டுள்ளது. எனவே வியாபராம் அமோகமாக நடக்கிறது.
ஆஸ்திரேலியாவில் பலரும் electric vehicles-ஐ வாங்கும் நிலை இங்கு உருவாக பலமுனை செயல்திட்டம் வகுக்கப்படவேண்டும்: அரசு உறுதியான இலக்குகளைத் தீர்மானிக்கவேண்டும்; சுற்றாடல் தொடர்பான மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகள் COP 26 மாநாட்டு தீர்மானங்களுக்கமைய வகுக்கப்படவேண்டும்; பெட்ரோல் கார்கள் வெளியேற்றும் கரியமில வாயு தொடர்பான உச்சபட்ச வரையறைகள் நிரணயிக்கப்படவேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக electric vehicles வாங்க விரும்புபவர்களுக்குப் போதுமான வரிச்சலுகைகள் மற்றும் மானியங்கள் என்பன வழங்கப்படவேண்டும். ‘பட்டரி தொழில் நுட்பம் அபிவிருத்தியடையும்போது electric vehicles களின் விலை கணிசமாகக் குறையும்’ என்று அரசு கூறிக்கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை. தற்போதைய நிலையில் electric vehicles ஒன்றைத் தயாரிக்கும் செலவு பெட்ரோல் கார்களைத் தயாரிக்கும் செலவைவிட மிக அதிகம் என்பதே நிதர்சனம் என்பதால் அதைக் கருத்திற்கொண்டு அரசு சலுகைகள் வழங்கவேண்டும் என்று இந்தத் துறையில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.