Key Points
- கோடை காலம் தொடங்குவதால், பலர் வெளி இடங்களில் உடற்பயிற்சி செய்கிறார்கள்.
- அதிக சூடான நாட்களில் வெளி இடங்களில் செய்யும் உடற்பயிற்சி உடல் உறுப்புகளை நிரந்தரமாக சேதப்படுத்தும் என்பதற்கு மருத்துவ ஆதாரங்கள் உள்ளன.
- உங்கள் உடல் சூடாகத் தொடங்கும் போது முதலில் பாதிக்கப்படுவது மூளை தான் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
ஆஸ்திரேலியாவில் கோடைகாலம் துவங்கி, வெப்பநிலை தொடர்ந்து உச்சத்தைத் தொட்டு வருவதால், கடுமையான வெப்பநிலை நாட்களில் வெளியே உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து சுகாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
ஆரம்பித்த முதல் பதினைந்து நாட்களிலேயே, கடந்த ையை விட ை பதியப்பட்டுள்ளது.
இந்த உச்சி வெய்யில் வெப்பநிலை எவ்வளவு ஏறினாலும், Bondi Beach என்ற இடத்தில் வழமையாக வெளிப் புறத்தில் நின்று உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அது ஒரு தடையே இல்லை. உடற்பயிற்சி செய்யாமலிருக்க வானிலை மீது பழி போடக் கூடாது என்கிறார்கள் அவர்களில் சிலர்.
Bondi outdoor gym is typically bustling even on the hottest days. Source: SBS
Dr Simon Quilty is an ANU specialist physician and heat researcher. Credit: Australian National University
அதிக வெப்ப நிலையில் உடற்பயிற்சி செய்வது உங்கள் உறுப்புகளை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல், அப்படி உடற்பயிற்சி செய்பவர் ஒருவர் ஆபத்தான முடிவெடுக்கவும் வழிவகுக்கும் என்கிறார் Doctor Simon Quilty.
நாட்டைச் சுற்றிலும் பல இடங்கள் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், வெப்பத்திற்கு ஏற்றவாறு எமது உடல்கள் மாற்றிக் கொள்ள அனுமதிப்பது முக்கியம் என்று Doctor Simon Quilty கூறுகிறார்.
Sydney just experienced its hottest first fortnight of summer in more than 160 years of records. Source: AAP / Brent Lewin
மிகச் சிறந்த உடற் கட்டமைப்புக் கொண்டவர்கள் கூட, வரம்புகளை அதிகமாக மீறினால், அதிகமாகப் பாதிப்படையக் கூடிய அபாயம் உள்ளது என்று Doctor Simon Quilty எச்சரிக்கிறார்.
Instead of going for a run after work, where you've been in a comfortably cool room all day, experts suggest jogging early in the morning before the sun rises. Source: AAP / Michael Probst
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.