McDonalds, Hungry Jack's ,KFC போன்ற fast food நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து பணியாளர்களை வரவழைப்பதற்கு ஏதுவாக இருந்த fast track எனப்படும் துரித கதியில் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடைமுறையை அரசு ரத்துச் செய்துள்ளது.
இதன்மூலம் fast food துறையில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையவுள்ளது.
கடந்த 2012இல் ஜுலியா கிலாட் அவர்கள் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆஸ்திரேலியா முழுவதுமுள்ள fast food துறையில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடிந்தது.
இந்தநிலையில் குடிவரவு அமைச்சர் Peter Dutton இந்த ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து fast food நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களை வரவழைப்பதானால் ஏனையவர்கள் பின்பற்றும் நடைமுறையிலேயே 457 விசா விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.
ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் குறிப்பாக இளைஞர்களுக்கு இந்த வேலை வாய்ப்புக்கான முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டதாக குடிவரவுத்துறை அமைச்சர் Peter Dutton தெரிவித்தார்.