தற்காலிக விசாவிலிருந்தபடி சொத்துக்களை வாங்கி குவித்தவருக்கு ஆஸி நீதிமன்றம் அபராதம்!

தற்காலிக விசாவிலிருந்தபடி பல சொத்துக்களை வாங்கியதன் மூலம், ஆஸ்திரேலியாவின் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான சட்டத்தை மீறினார் என குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் இரண்டரை லட்சம் டொலர்கள் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

Court Order

Source: Getty Images

மெல்பனைச் சேர்ந்த விஜய் பாலசுப்ரமணியன் என்பவரே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டவர் ஆவார்.

2015 ஆம் ஆண்டு தற்காலிக விசாவுடன் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த பாலசுப்ரமணியன், 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கும் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குமிடையில், மெல்பனில் Hoppers Crossing, Werribee, Aintree ஆகிய பிரதேசங்களில் பல சொத்துக்களை வாங்கினார் என்று கூறப்படுகிறது.

இந்தச் சொத்துக் கொள்முதல்கள் குறித்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீளாய்வுச் சபைக்கு (Foreign Investment Review Board) தெரியப்படுத்தி, உரிய அனுமதி பெறாத காரணத்தினால், பாலசுப்ரமணியன், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான சொத்துக் கொள்முதல் சட்ட விதிகளை ஆறு தடவைகள் மீறினார் என்று ஆஸ்திரேலிய வரித்திணைக்களத்தினால், (ATO) ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தின் கவனத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

இது குறித்த வழக்கினை விசாரித்த பெடரல் நீதிமன்ற நீதிபதி Jonathan Beach, வரித்திணைக்களத்தின் கூற்றினை ஏற்றுக்கொண்டு, பாலசுப்ரமணியனிற்கு அபராதம் விதித்தார்.

அதாவது, சட்டவிரோதமாக வாங்கப்பட்ட சொத்துக்களின் முதலீட்டு ஆதாயம் (capital gain) ஏழு லட்சத்து 31 ஆயிரத்து 300 டொலர்களில், இரண்டரை லட்சம் டொலர்களை அபராதமாகச் செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், வரித்திணைக்களத்தின் சட்டச் செலவினையும்  பாலசுப்ரமணியன் செலுத்தவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

வெளிநாட்டவர்களுக்கான முதலீட்டுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறினார் என்ற குற்றச்சாட்டில் ஆஸ்திரேலியாவில் அபராதம் விதிக்கப்பட்ட முதலாவது நபர் பாலசுப்ரமணியன் என்பது குறிப்பிடத்தக்கது.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Share
Published 15 April 2022 12:36am
Updated 15 April 2022 12:48am

Share this with family and friends