விக்டோரியாவில் P-plate மற்றும் L-Plate ஓட்டுநர்களுக்கான சோதனைகள் இலவசம்

விக்டோரியா மாநிலத்திலுள்ள P-plate மற்றும் L-Plate ஓட்டுநர்கள், இப்போது தங்கள் ஓட்டுநர் சோதனைகளை இலவசமாக மேற்கொள்ள முடியும்.

Drivers' licence tests resume in Victoria from Monday

Source: Getty / Getty Images

ஆகஸ்ட் 15 முதல் குறித்த ஓட்டுநர்களுக்கான சோதனைக் கட்டணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் விக்டோரியாவிலுள்ள 250000 க்கும் மேற்பட்ட L மற்றும் P -Plate ஓட்டுநர்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆன்லைனுக்கு மாற்றப்பட்ட learner permit மற்றும் hazard perception சோதனைகளையும் இலவசமாக மேற்கொள்ள முடியும்.

மாநில அரசின் இச்சலுகை மூலம் L-Plate ஓட்டுநர்கள் 51 டொலர்களைச் சேமிக்கும் அதேநேரம் P-plate ஓட்டுநர்கள் 133 டொலர்களை சேமிக்கமுடியும்.


அரசின் இத்திட்டம் புதிய ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான செலவுகளை குறைக்க உதவுவதாக விக்டோரியாவின் சாலைகள் மற்றும் சாலை பாதுகாப்பு அமைச்சர் Ben Carroll தெரிவித்தார்.

VicRoads பகுதியளவில் தனியார்மயமாக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து safe driver discount திட்டமும் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் முந்தைய மூன்று ஆண்டுகளில் demerit points பெறாத அல்லது சாலைப் பாதுகாப்பு விதி மீறல்களில் ஈடுபடாத ஓட்டுநர்கள் தமக்கான அடுத்த ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கும்போது 25 சதவீதம் தள்ளுபடியைப் பெறுவார்கள்.

இதன்மூலம் பத்து வருடத்திற்கான ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கும் ஓட்டுநர்கள் 73 டொலர்கள் வரை சேமிக்க முடியும்.

அக்டோபர் 1ஆம் தேதிக்குப் பிறகு புதுப்பிக்கப்படும் ஓட்டுநர் அனுமதிப்பத்திரங்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும்.

திட்டம் 2013ம் ஆண்டுமுதல் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share
Published 18 August 2022 12:47pm
Updated 18 August 2022 12:56pm
By Renuka
Source: SBS

Share this with family and friends