- தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை இலகுவாகப் பெறலாம்
- அரசு வழங்கும் சான்றிதழ் IATA அங்கீகாரம் பெற்றது
- உலகின் அனைத்து இடங்களிலும் இது செல்லுபடியாகும்
- இலவசமாக myGov அல்லது Medicare Express இலிருந்து பெறலாம்
இந்நாட்டு மக்கள், மற்றும் இந்நாட்டில் வாழ குடியுரிமை உள்ளவர்கள் Covid-19 தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை Australian Immunisation Register என்ற ஆஸ்திரேலிய நோய்த் தடுப்பு பதிவேட்டில் இருந்து பெறலாம் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு கூட்டு அறிக்கையில் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் பயணிக்க
“பாதுகாப்பாகவும்” மற்றும் “நம்பிக்கையுடனும்” ஒருவர் பயணிக்க இது வழி வகுக்கும் என்று அந்த .
அரசு வழங்கும் ஆதாரத்தை டிஜிட்டல் (digital) அல்லது அச்சிடப்பட்ட வடிவத்தில் ஒருவர் பதிவிறக்கம் செய்து அதனை எடுத்துச் செல்லலாம். அந்த ஆதாரம் ஒரு QR குறியீட்டைக் (QR Code) கொண்டிருக்கும். ஒருவர் தடுப்பூசி போட்டுள்ளதை அதிகாரிகள் ஊடுகதிர் (scan) மூலம் உறுதி செய்து கொள்வார்கள்.
எமது அரசு வழங்கும் COVID-19 கடவுச் சீட்டு, சர்வதேச விமான போக்குவரத்து சங்கமானம் (International Air Transport Association) IATA அங்கீகாரம் பெற்றது.

Source: DFAT
தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறவும், சர்வதேச அளவில் பயணிக்கவும் இந்த ஆதாரம் உதவும்.
இந்த ஆதாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம், உலகளவில் முன்னணியில் உள்ளது என்றும் ஆஸ்திரேலிய கடவுச் சீட்டு போல பாதுகாப்பானது என்றும் அமைச்சர்கள் கூறினர்.
உலக சுகாதார அமைப்பு (World Health Organisation), மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு (International Civil Aviation Organisation) என்பவற்றின் வழிகாட்டுதலுக்கு அமைய இந்த Covid-19 சான்றிதழ் அமைக்கப்பட்டிருப்பதால், உலகின் அனைத்து இடங்களிலும் இது செல்லுபடியாகும் என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.
சர்வதேச எல்லைகளைப் பாதுகாப்பாக மீண்டும் திறப்பதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் இது ஒரு முக்கிய படியாகும் என்று அரசு நம்புகிறது.

Source: DFAT
உங்கள் ஆதாரச் சான்றிதழை myGov அல்லது Medicare Express செயலியில் இருந்து இலவசமாகப் பெறலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.