இந்த நிதியாண்டில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் இடங்களை State Nominated விசாக்களுக்கென அரசு ஒதுக்கியுள்ளது.
Skilled migrants-ஐ ஈர்க்கும்வகையில் ஒவ்வொரு மாநிலங்களும் பிராந்தியங்களும் என்னென்ன வகையில் தமது வாசல்களைத் திறந்திருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.
நியூ சவுத் வேல்ஸ்
12,000 க்கும் மேற்பட்ட இடங்களுடன், NSW மாநிலம் State Nominated விசாக்களுக்கான மிகப்பெரிய ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது.
இம்மாநிலத்திற்கான தொழிற்பட்டியலில் மாற்றங்கள் செய்யப்பட்டுவருவதாகவும், வரும் வாரங்களில் இது NSW migration இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தொழிற்பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து NSW மாநிலம் விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கும்.
விக்டோரியா
2022/23 நிதியாண்டில், NSW மாநிலத்திற்கு அடுத்தபடியாக விக்டோரியா இரண்டாவது பெரிய ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது.
9000 subclass 190 விசாக்கள் , 2400 regional விசாக்கள் மற்றும் 170 வணிக விசாக்கள் என மொத்தம் 11,570 state nominated விசாக்கள் விக்டோரிய மாநிலத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
Commonwealth தொழிற்பட்டியலில் 420 க்கும் மேற்பட்ட வேலைகளைச் சேர்ப்பதன்மூலம் விக்டோரியா அதன் தொழிற்பட்டியலை விரிவுபடுத்தியுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் விண்ணப்பதாரர்கள் மற்றும் ஏற்கனவே விக்டோரியாவில் வசிப்பவர்கள், இந்த விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
மேற்கு ஆஸ்திரேலியா
NSW மற்றும் விக்டோரியாவிற்கு அடுத்தபடியாக, மேற்கு ஆஸ்திரேலியா மாநிலம் மூன்றாவது பெரிய ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது.
5,350 subclass 190 விசாக்கள் மற்றும் 2790 regional விசாக்கள் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 100 க்கும் மேற்பட்ட கூடுதல் வேலைகள் அதன் தொழிற்பட்டியலில் சேர்க்கப்பட்டு, தற்போது மொத்தம் 276 வேலைகள் மேற்கு ஆஸ்திரேலிய தொழிற்பட்டியலில் காணப்படுகின்றன.
$200 விண்ணப்பக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தல், வேலை ஒப்பந்தத்திற்கான நிபந்தனையை 12 மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாக குறைத்தல் மற்றும் விண்ணப்பதாரர்கள் தங்களிடம் போதுமான நிதி இருப்பதைக் காட்டுவதற்கான தேவைகளைக் குறைத்தல் உள்ளிட்ட பிற தற்காலிக சலுகைகளும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
Professional மற்றும் manager பதவிகளுக்கான கூடுதல் ஆங்கிலப்புலமை நிபந்தனைகளும் நீக்கப்படுவதுடன் தொழில் அனுபவ நிபந்தனையும் குறைக்கப்படும்.
இத்தற்காலிக மாற்றங்கள் அடுத்த மாதம் நடைமுறைப்படுத்தப்படும்.
குயின்ஸ்லாந்து
2022/23 நிதியாண்டிற்கான குயின்ஸ்லாந்தின் தொழிற் பட்டியல் 114 தொழில்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கோவிட் பரவலுக்குப் பிறகு முதல் முறையாக வெளிநாட்டு விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்க முடியும்.
இந்த ஆண்டு 3,000 subclass 190 விசாக்கள், அத்துடன் 1,200 regional விசாக்கள் மற்றும் 235 வணிக விசாக்கள் குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியா
தெற்கு ஆஸ்திரேலியா ஏற்கனவே அதன் sponsorship திட்டத்திற்கான விண்ணப்பங்களைத் திறந்துள்ளது.
500 க்கும் மேற்பட்ட தொழில்களுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கமுடியும்.
SkillSelect தரவுத்தளத்தில் தமது expression of interest-ஐ பதிவுசெய்த வெளிநாட்டு விண்ணப்பதாரர்களும் இதனூடாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்திற்கென 2,700 subclass 190 விசாக்கள், அத்துடன் 3,180 regional மற்றும் 70 வணிக விசாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Northern Territory
வெளிநாடுகளில் வசிப்பவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்காத சில அதிகார வரம்புகளில் Northern Territory-உம் ஒன்றாகும்.
வெற்றிகரமான விண்ணப்பதாரர்கள் குறைந்தது மூன்று வருடங்கள் NT இல் வாழவும் வேலை செய்யவும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பதாரர் Commonwealth தொழிற்பட்டியலில் உள்ள 420 க்கும் மேற்பட்ட வேலைகளில் ஒன்றுக்கு விண்ணப்பிக்கமுடியும்.
NT இல் அதிகதேவையுள்ள 200 க்கும் மேற்பட்ட வேலைகளை உள்ளடக்கிய குறுகிய தொழிற்பட்டியலும் உள்ளது.
Australian Capital Territory
ACT-இன் தொழில் பிரிவுகள் மிகவும் விரிவானது என்பதுடன் Commonwealth தொழிற்பட்டியலில் உள்ள 420 க்கும் மேற்பட்ட வேலைகளை உள்ளடக்கியது.
ACT-க்கென 800 subclass 190 விசாக்கள் 1,920 regional விசாக்கள் மற்றும் 10 வணிக விசாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
டாஸ்மேனியா
டாஸ்மேனியாவின் தொழிற்பட்டியலிலுள்ள வேலையொன்றில் ஏற்கனவே பணிபுரிந்துகொண்டிருப்பவர்கள் மற்றும் அங்கு ஏற்கெனவே இரண்டு வருடங்களாக வேலைசெய்துகொண்டிருப்பவர்களுக்கு அம்மாநிலம் முன்னுரிமையளிக்கிறது.
மீதமுள்ள இடங்களுக்கு Commonwealth தொழிற்பட்டியலில் உள்ள அனைத்து தொழில்களுக்குமான விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும் என டாஸ்மேனிய அரசு தெரிவித்துள்ளது.
விசாக்கள் பற்றிய உத்தியோகபூர்வ தகவல் மற்றும் ஏனைய அனைத்து விவரங்களையும் இல் பெற்றுக்கொள்ளலாம்.
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.