விமானப் பயணத்தில் Luggage தொலைந்துவிடாமலிருக்க என்ன செய்யலாம்?

விமானப் பயணங்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சுகமான அனுபவங்களாக இருப்பதில்லை. விமானத்தைத் தவறவிடுவது, அடுத்த விமானம் connecting flight சரியான நேரத்திற்கு வராததால் பல மணி நேரங்கள் விமான நிலையத்தில் காத்திருக்கவேண்டி ஏற்படுவது, குழுவாகப் பயணித்தவர்களுள் சிலர் காணாமற்போவது, turbulence என்ற வானில் நிகழும் கொந்தளிப்பான நிலைமை காரணமாக விமானப்பயணம் பயங்கரமான அனுபவமாக மாறிப்போவது என்று பல அனுபவங்கள் பலருக்கு இருக்கக் கூடும். இவற்றைத்தவிர பொதுவாக பலருக்கும் ஏற்படும் அனுபவம்தான் தமது luggage என்ற பயண உடமைகள் தொலைந்து போவது.

International travel resumes from November 2021

Photo used for representation purposes only. Source: AAP Image/Lukas Coch

இன்றைய தொழில்நுட்பங்கள் காரணமாக luggage என்ற பயண உடமைகள் முற்றாகத் தொலைந்து போவது அரிது என்ற போதும் சில வேளைகளில் அவை வந்துசேர பல மணிநேரங்கள் அல்லது சில நாட்கள் கூட எடுக்கக் கூடும். ஒருவர் போய்ச்சேர்ந்துள்ள இடத்தில் மாற்று உடைகள் இல்லாத நிலையில் உடனடியாக அவற்றை வாங்கவேண்டிய இக்கட்டான நிலை ஏற்படலாம். அத்தோடு மிகப்பிரதானமான ஆவணங்களோ அல்லது மிகப்பெறுமதியான பொருட்களோ அந்த luggage களுக்குள் இருந்திருப்பின் பதட்டமும் மன உளைச்சலும் அதிகரிக்கும்.

இவற்றை முடிந்தவரை தவிர்க்குமுகமாக இப்போது பல Smart Luggage Tags மற்றும் Smart Luggage Trackers கள் சந்தைக்கு வந்திருக்கின்றன. உங்கள் luggage இப்போது எங்கே இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள இந்த Luggage Tags மற்றும் Luggage Trackers உதவுகின்றன.

இந்த luggage trackers மூலமாக, தொலைந்த பயண உடமைகளை வெகு விரைவாக கண்டுபிடிக்க இயலும். இணையத்தொடர்பு மூலமாகவோ அல்லது மொபைல் போன் app ஒன்றின் மூலமாக இதை செய்யமுடியும் என்பதால் பலரும் இப்போது இவற்றைப் பயன்படுத்தத்தொடங்கியிருக்கிறார்கள்.
fiji news
Visitors waiting for their luggage after landing in Fiji on 1 December 2021. Source: Department of Information, Fiji.

Luggage Trackers எப்படி செயல்படுகின்றன?

பல்வேறு வகைகளில் luggage trackers செயல்படுகின்றன. சில tags கள் இணையத் தொடர்பு மூலமாகச் செயல்படுகின்றன. சில, Bluetooth மற்றும் wi fi என்ற தொடர்பு மூலமாகச் செயல்படுகின்றன. வேறு சில GPS -Global Positioning System மற்றும் GSM- Global System for Mobile communications என்ற தொழில்நுட்பங்களில் செயல்படுகின்றன. ஆனால் இவை யாவும் பொதுவாக செய்யும் ஒரு காரியம் என்னவென்றால், பயணியின் contact details - தொடர்பு விபரங்கள், itinerary- பயணவிபரம், மற்றும் flight details -பயணிக்கும் விமானங்களின் விபரம் என்பவற்றை பதிவு செய்து கொள்வது. ஒரு App மூலமாகவும் பதிவு செய்துகொள்ளமுடியும். இந்த வசதி காரணமாக ஒருவரது பயண உடமை எங்கிருக்கிறது என்பதை விரைவாக கண்டுபிடிக்கலாம்.

GPS தொடர்பு மூலமாகச் செயல்படும் trackers கள் சிறந்தவை என்று கூறப்படுகின்றன. ஒருவரின் Luggage உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவை கண்டுபிடித்துவிடும். ஆனால் மரங்கள், மலைகள் உயர்ந்த கட்டடங்கள் என்பன காரணமாக தடைகள் ஏற்படக்கூடும். உதாரணமாக விமான நிலையத்திற்குள் இருந்து GPS தொடர்பில் தேடும்போது GPS signal மிக துல்லியமாக இருக்காது.

GPS முறையிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்யக்கூடியது GSM tracking. இது mobile போன் தொடர்பு உள்ள எல்லா இடங்களையும் சென்றடையும். ஆனால் ஜப்பான், தென்கொரியா போன்ற சில நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை அனுமதிப்பதில்லை.
Tourism design concept: male and female tourist with gps map tag 3d isometric
Tourism design concept: male and female tourist with gps map tag 3d isometric vector concept for banner, website, illustration, landing page, flyer, etc. Source: iStockphoto/ Getty Images
Bluetooth சுமார் 30 மீட்டர் தொலைவுவரையே செயல்படவல்லது. ஆகவே இந்த குறுகிய தொலைவில் இருக்கக் கூடிய luggage களைக் கண்டுபிடிக்க மட்டுமே இவை உதவும். GPS மற்றும் Bluetooth இரண்டும் இணைந்த கருவிகளே அதிகமான் பயணிகளால் பயன்படுத்தப்படுகின்றன.

இணையத் தொடர்பு மூலமாகச் செயல்படும் tag களுக்கு உதாரணமாக Dynotag Protags ஐக் குறிப்பிடலாம். Luggage இன் கைப்பிடியில் இதை கட்டிவிடலாம் என்றும் உறுதியானது என்றும் தொழிநுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர். இது இணைய வலைத்தள பக்கத்துடன் தொடர்புள்ளது என்றும் Passive GPS என்ற முறையில் இது இணைக்கப்பட்டுள்ளது என்றும் இதற்கு மாத அல்லது ஆண்டு கட்டணம் கிடையாது என்றும் இதன் விலை சுமார் 20 ஆஸ்திரேலிய டாலர்கள் என்றும் தகவலகள் கூறுகின்றன.

I tag Nut Cell என்பது Bluetooth தொடர்பில் இயங்கும் மற்றொன்று. Bank card அளவில் வரும் இவற்றை நான்கு tag கள் கொண்ட தொகுப்பாகவும் வாங்கமுடியும். குடும்பத்தில் நான்கு பேர் பயணித்தால் ஒவ்வொருவரது luggage க்குள்ளும் ஒன்றை வைத்துவிடவேண்டும். இது உங்கள் மொபைல் போன் app உடன் தொடர்பிலிருக்கும். தொடர்பு எல்லையைத் தாண்டினால் ஒரு சமிக்ஞையை போனுக்கு அது அனுப்பும். App ஐத் திறந்தால் ஒரு map வரைபடம் வரும். அதில் உங்களது luggage இருக்கும் இடம் சுட்டிக்காட்டப்படும். இதன் விலை சுமார் 20 டாலர்கள். இது Bluetooth மற்றும் cellular இரண்டும் இணைந்த தொழில்நுட்பத்தோடு செயல்படுகிறது.
Map Pin in Mobile Cell
Map pin stuck in a mobile cell phone with GPS Map.Alternative: Source: E+/ Getty Images
இவற்றைத்தவிர Bluetooth இல் இயங்கும் Tile மற்றும் GPS, GSM தொடர்பில் இயங்கும் americaloc gl300, aggro, Optimus, Apple AirTag, Samsung smart tag, landAirSea gps tracker என்று பல brand களில் இவை இப்போது சந்தையில் கிடைக்கின்றன. இந்த சேவைக்கு சில நிறுவனங்கள் மாத அல்லது ஆண்டு கட்டணங்களை அறவிடுகின்றன.

இப்படி பல பொருட்கள் சந்தையில் இருப்பதால் எது நல்லது அல்லது எதை வாங்கலாம் என்ற கேள்வி பிறக்கிறது. சிலருக்கு குழப்பம் ஏற்படுகிறது.

நீங்கள் எந்த கருவியை வாங்குவதானாலும் நீங்கள் வாங்கும் கருவி, Luggage இற்கு வெளியே தொங்கவிடப்படும் ஒன்று என்றால், உறுதியான இணைப்பு இருக்கிறதா என்பதும் எளிதில் பாதிக்கப்படாதவண்ணம் உறுதியாக செய்யப்பட்டிருக்கிறதா என்றும் பாருங்கள்.

Luggage இனுள் வைக்கப்படுவதாகவிருந்தால் அதன் தொடர்பாற்றல் range போதுமானதாக இருக்கிறதா என்பதை கவனியுங்கள். அவற்றில் உள்ள battery யின் ஆயுள் பற்றிய விபரங்களை பாருங்கள். 15 நாட்கள் தொடக்கம் சுமார் ஒரு வருடம் வரையான ஆயுள் உள்ள பட்டரிகளைக்கொண்ட கருவிகள் இருக்கின்றன என்பதை மனதில் கொள்ளுங்கள். அடுத்து முக்கியமாக மாத அல்லது ஆண்டு கட்டணம் செலுத்தவேண்டுமா என்ற விபரத்தை கேளுங்கள்.
All COVID-19 border restrictions to be lifted by Home Affairs
All COVID-19 border restrictions to be lifted by Home Affairs Source: Getty Images
FAA/TSA/FCC (Federal Aviation Administration, Transport Security Administration, Flight Control Computer) compliant என்பது மற்றுமொரு பிரதான அம்சமாகும். இந்த luggage trackers களுள் பல, mobile cellular தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் விமானம் பறக்கும் போது இவை செல்படுவது விமானத்தின் கட்டுப்பாட்டுக்கும் செயல்பாட்டுக்கும் ஆபத்தானதாகும். ஆகவே இந்த luggage trackers கள் விமானம் பறப்பதற்கான signal களை உணர்ந்தவுடனேயே செயல்பாட்டைத்துண்டித்துக்கொள்ளும் ஆற்றல் உள்ளவையாக இருக்கவேண்டும். சில விமான நிறுவனங்கள் இந்தமாதிரியான luggage trackers களுக்கு தடைவிதித்திருக்கின்றன.

தொழில்நுட்பங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக பயண உடமைகள் முற்றாகத் தொலைந்துபோவது அரிது என்றபோதும் 2019 இல் 400 பிரதான விமான நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 28 மில்லியன் அதாவது சுமார் மூன்று கோடி luggageகள் உரிய நேரத்தில் பயணிகளுக்கு கிடைக்கவில்லை என்றும் இவற்றுள் 5 சதவீதமானவை முழுமையாகத் தொலைந்து போனதாகவும் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. ஆகவே பயண உடமைகளைக் கண்காணிக்கும் கருவிகள் பரவலாக பிரபலமடைந்து வருவதில் வியப்பில்லை.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share
Published 5 July 2022 12:12pm
By R.Sathiyanathan

Share this with family and friends