கடந்த பெப்ரவரி 21 முதல் ஆஸ்திரேலிய எல்லைகள் சுற்றுலாப்பயணிகளுக்கென முழுமையாக திறக்கப்பட்டது.
அன்று முதல் ஏப்ரல் 13 வரையான காலப்பகுதியில், ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா விசாவில் வந்தவர்களின் எண்ணிக்கை 109 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட காலப்பகுதியில் மொத்தம் 373,152 சுற்றுலாவிசா விண்ணப்பங்கள் தாக்கல்செய்யப்பட்டதாவும், இவற்றில் 292,567 விண்ணப்பங்கள் அங்கீரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தாக்கல்செய்யப்பட்டவற்றில் 69,242 விண்ணப்பங்கள் இந்தியாவிலிருந்தும், 43,276 விண்ணப்பங்கள் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும், 28,008 விண்ணப்பங்கள் அமெரிக்காவிலிருந்தும் கிடைத்துள்ளதாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
தற்போதைய நிலைமையின்படி 75 வீதம் முதல் 90 வீதமான Subclass 600 பிரிவு விசா விண்ணப்ப பரிசீலனைக்கு 26 நாட்கள் முதல் 37 நாட்கள்வரை எடுப்பதாக குறிப்பிடப்படுகிறது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.