ஆஸ்திரேலியாவில் கல்வி கற்ற இந்திய இளைஞர் நியூசிலாந்தில் திடீர் மரணம்!

Facebook

Source: Facebook

ஆஸ்திரேலியாவில் கல்வி கற்றுவிட்டு நியூசிலாந்தில் வசிந்துவந்த இந்திய நபர் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார். 

பஞ்சாப்பை சேர்ந்த சித்தார்த் என்ற 31 வயது குடும்பஸ்தரே இவ்வாறு பலியானவர் ஆவார்.

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து பிரிஸ்பேனில் கல்வி கற்றுக்கொண்டிருந்த சித்தார்த், நேபாளத்தை சேர்ந்த சிறிஜனாவை சந்தித்து, இருவருக்கும் 2013 ஆம் ஆண்டு திருமணம் இடம்பெற்றது. அதன்பின்னர், நியூசிலாந்துக்கு சென்று அங்கு வசித்த சித்தார்த் - சிறிஜனாவுக்கு ஒன்பது மாதங்களில் ஒரு குழந்தையும் இருக்கிறது.

ஹோட்டல் நிர்வாகத்துறையில் தனது கல்வியை ஆஸ்திரேலியாவில் நிறைவுசெய்துகொண்டு நியூசிலாந்து சென்ற சித்தார்த், அங்கு ஹோட்டல் ஒன்றில் பதிவுகளை மேற்கொள்ளும் நிர்வாக அதிகாரியாகவும்,  ஓக்லண்டில் எரிபொருள் நிரப்பும் நிலையத்திலும் வேலை செய்தார்.

கடந்த 27 ஆம் திகதி, எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது சித்தார்த் மயங்கி விழுந்து அதன் பின்னர் மேற்கொண்ட சிகிச்சைகள் எதுவம் பலனிக்காத நிலையில் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.

மூளையில் ஏற்பட்ட இரத்தக்குழாய் வெடிப்பினால் இந்த மரணம் சம்பவித்தாக சித்தார்த்தின மனைவி தெரிவித்துள்ளார்.

நிரந்தர வதிவிட விசாவுமின்றி குழந்தையோடு நிர்க்கதியாகியுள்ள தனக்கு உதவி செய்யுமாறு சித்தார்த்தின் மனைவி சமூக வலைத்தத்தின் ஊடாக கோரியுள்ளார்.

Readers seeking support can contact Lifeline for 24-7 crisis support on 13 11 14, and Kids Helpline on 1800 55 1800 (for young people aged 5 to 25). More information is available at and .

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 31 July 2021 10:45am

Share this with family and friends