பிரியா-நடேஸ் குடும்பத்தை விடுதலை செய்யுமாறு முன்னாள் பிரதமர் Malcolm Turnbull வலியுறுத்தல்!

From left: Nades Murugappan, Kopika, Priya,and Tharnicaa.

From left: Nades Murugappan, Kopika, Priya,and Tharnicaa. Source: Supplied

கிறிஸ்மஸ் தீவு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பத்தினரை ஆஸ்திரேலியாவின் புதிய உள்துறை அமைச்சர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி விடுதலை செய்யவேண்டும் என முன்னாள் பிரதமர் Malcolm Turnbull வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் ABC தொலைக்காட்சியின்  Q+A நிகழ்வில் கலந்துகொண்டபோது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்ட விடயத்தினை வலியுறுத்தியிருந்தார். 

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் எல்லைப்பாதுகாப்பு கொள்கை எனப்படுவதும் மிகவும் கடுமையானது என்பதை ஒப்புக்கொண்ட Malcolm Turnbull, பிரியா-நடேஸ் குடும்பத்தினரது தடுப்பு விடயத்தில் பரிவையும் மனிதாபிமானத்தையும் கொஞ்சமாவது காண்பிக்கவேண்டும் என்றார்.

பிரியா-நடேஸ் தம்பதிகளையும்  ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது குழந்தைகளையும் குயின்ஸ்லாந்துக்கு அனுப்புவதே சரியான முடிவாக இருக்கமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரியா-நடேஸ் குடும்பத்தினர் தடுப்புக்கு கொண்டுசெல்லப்படும்போதும், அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த கடைசிநேரத்தில் வழக்கொன்றின் மூலம் தடுத்துநிறுத்தப்பட்டபோதும் Malcolm Turnbull பிரதமராக பொறுப்பிலிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 23 April 2021 1:49pm

Share this with family and friends