Highlights
- ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான முன்னுரிமை அடிப்படையிலான தொழிற்பட்டியலில்-PMSOL புதிதாக 22 தொழில்கள் இணைக்கப்பட்டுள்ளன.
- Chef, Accountant, Civil Engineer உள்ளிட்ட தொழில்கள் இப்புதிய பட்டியலில் அடங்குகின்றன.
- PMSOL-இன் கீழ் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Priority Migration Skilled Occupation List (PMSOL)- முன்னுரிமை அடிப்படையிலான தொழிற்பட்டியலில் புதிதாக 22 தொழில்கள் இணைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் Alex Hawke இன்று அறிவித்தார்.
இதையடுத்து Priority Migration Skilled Occupation List-இல் உள்ள மொத்த தொழில்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
Priority Migration Skilled Occupation List என்பது மிக அத்தியாவசிய தொழில்துறைகளுக்கான பணியாளர்களை முன்னுரிமை அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு வரவழைப்பதற்கான பொறிமுறையாகும்.
Priority Migration Skilled Occupation List-இல் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள தொழில்களின் விவரங்கள் வருமாறு:
- Accountant (General) (221111)
- Accountant (Taxation) (221113)
- Accountant (Management) (221112)
- External Auditor (221213)
- Internal Auditor (221214)
- Electrical Engineer (233311)
- Civil Engineer (233211)
- Structural Engineer (233214)
- Geotechnical Engineer (233212)
- Transport Engineer (233215)
- Mining Engineer (233611)
- Petroleum Engineer (233612)
- Surveyor (232212)
- Cartographer (232213)
- Other Spatial Scientist (232214)
- Medical Laboratory Scientist (234611)
- Orthotist / Prosthetist (251912)
- Multimedia Specialist (261211)
- Analyst Programmer (261311)
- Software and Applications Programmers (261399)
- ICT Security Specialist (262112)
- Chef (351311)
குறித்த மாற்றம் தொடர்பில் தொழில்வழங்குநர்கள், வணிக தலைவர்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் போன்றவற்றுடன் அரசு இணைந்து செயற்படுவதாகவும் அமைச்சர் Alex Hawke தெரிவித்தார்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள Skilled Occupation Listஅடிப்படையில் தாக்கல்செய்யப்படும் விசா விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் என்றபோதிலும், Priority Migration Skilled Occupation List-இன் கீழ் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கோவிட் பரவலையடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக ஆஸ்திரேலியாவுக்குள் வெளிநாட்டு தொழிலாளர்கள் வருவது கடினமாகவுள்ள சூழலில், இந்தநிலை அடுத்த ஆண்டு நடுப்பகுதியிலிருந்து மாற்றமடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இவ்வாறு Priority Migration Skilled Occupation List-இன் கீழ் வேலையொன்றைப்பெற்று ஆஸ்திரேலியா வருபவருக்குரிய தனிமைப்படுத்தல் செலவு அவரையோ அல்லது அவரை பணிக்கமர்த்தவுள்ள நிறுவனத்தையோ சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.