உலகின் No.1 பாஸ்போர்ட் எது தெரியுமா?

passport

Source: passports

வீசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்/கடவுச்சீட்டுகள் எவை என்ற மீளாய்வு செய்யப்பட்ட புதிய பட்டியலை Henley Passport Index நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி உலகின் அதிசக்தி வாய்ந்த கடவுச்சீட்டு என்ற பெருமையை ஜப்பான்  கடவுச்சீட்டு பெறுகிறது. இதைப் பயன்படுத்தி 190 நாடுகளுக்கு வீசா இல்லாமல் சென்றுவரலாம்.

இரண்டாம் இடத்தில் சிங்கப்பூர் கடவுச்சீட்டு காணப்படுகின்றது. இதனைப் பயன்படுத்தி 189 நாடுகளுக்குச் செல்லலாம்.

மூன்றாம் இடத்தில் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் தென்கொரியா கடவுச்சீட்டுகள் காணப்படுகின்றன.

ஆஸ்திரேலியா கடவுச்சீட்டு 7வது இடத்தில் காணப்படும் அதேநேரம் நியூசிலாந்து கடவுச்சீட்டு 8ம் இடத்திலுள்ளது.

இதேவேளை உலகின் அதிகசக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளுக்கான பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள நாடுகளின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

   

Henley Passport Index power ranking1. Japan: 190

2. Singapore: 189

3. Germany, France, South Korea: 188

4. Denmark, Finland, Italy, Sweden, Spain: 187

5. Norway, United Kingdom, Austria, Luxembourg, Netherlands, Portugal, United States: 186

6. Belgium, Switzerland, Ireland, Canada: 185

7. Australia, Greece, Malta: 183

8. New Zealand, Czech Republic: 182

9. Iceland: 181

10. Hungary, Slovenia, Malaysia: 180


 

Share
Published 10 October 2018 4:10pm
Updated 10 October 2018 4:30pm
Presented by Renuka


Share this with family and friends