நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் அகப்பட்டு மரணமடைந்த இளைஞர் பாகிஸ்தானைச் சேர்ந்த Ayaz Younus என்ற மென்பொருள் பொறியியலாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
25 வயதான Ayaz Younus, சிட்னி வடமேற்கில் கிடைத்த ஒப்பந்த வேலையொன்றில் இணைவதற்காக சென்றுகொண்டிருந்தபோது Cattai Ridge Road, Glenorie பகுதியில் வைத்து அவரது கார் வெள்ளத்தில் மூழ்கியது.
Ayaz Younus உடனடியாக அவசரசேவைப்பிரிவினரைத் தொடர்புகொண்டு தன்னை மீட்குமாறு கோரிக்கைவிடுத்திருந்ததாகவும், மீட்புப்பிரிவினர் குறித்த இடத்திற்குச் சென்றபோது காரினுள்ளேயே அவர் மரணமடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Ayaz Younus பயணம் செய்தது ஒரு வாடகைக்கார் எனவும் ஏதோவொரு காரணத்தினால் அவரால் காரைவிட்டு வெளியேறமுடியாமல் இருந்திருக்கிறது எனவும் இதுதொடர்பில் ஆராயப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை Ayaz Younus-இன் மரணம் தொடர்பில் பாகிஸ்தானிலுள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினரின் கோரிக்கைக்கிணங்க அவரது உடலை பாகிஸ்தான் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் Pakistan Association of Australia-இன் தலைவர் Farhat Jaffri தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.