தற்போது பதவியிலிருக்கும் லேபர் அரசு தனது தேர்தல் அறிக்கையில் 2030 ஆம் ஆண்டுக்குள் 89 சதவீதமான வாகனங்கள் EV வாகனங்களாக இருக்கும் என்று அறிவித்தது. இந்த நிலை 2035 இல் உருவாகும் என்று இப்போது சொல்கிறது. ஆனால் இந்நிலை உருவாகும் நிலை 2035 இலும் ஏற்படுமா என்பது சந்தேகமாகவே இருப்பதாக பல அவதானிகள் தெரிவிக்கிறார்கள்.
இந்த பின்னணியில் மாநில அரசுகள் வேறு இலக்குகளை வைத்து செயல்பட்டு வருகின்றன. ACT பிராந்திய அரசு 2035 இல் 80 தொடக்கம் 90 சதவீதமான புதிய வாகனங்கள் மின்னூர்திகளாகவே இருக்கும் என்ற இலக்குடன் செயல்பட்டுவருகிறது. NSW மற்றும் விக்டோரிய மாநில அரசுகள் 50 சதவீதம் என்ற இலக்கை நிரணயித்து செயல்பட்டு வருகின்றன.
முழுமையாக மின் பட்டரிகளால் இயங்கும் கார்கள் அதாவது EV vehicles- மின்னூர்திகள் பற்றிய விளம்பரங்கள் நிறையவே வந்தாலும் கூட அவற்றைப் பயன்படுத்துவதில் மற்ற நாடுகளோடு ஒப்புடுகையில் ஆஸ்திரேலியா பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. இதற்குப் பிரதான இரண்டு காரணங்கள்: ஒன்று மின்னூர்திகளின் விலை சாதாரண வாகனங்களின் விலையோடு ஒப்பிடுகையில் இங்கு மிக அதிகமாக இருப்பது. பலர் மின்னூர்திகளை வாங்கத் தடையாக இருப்பது அவற்றின் அதிக விலைதான் என்று AADA - Australian Automobile Dealers Association இன் CEO James Voortman சொல்கிறார். இரண்டாவது பிரதான காரணம் இவற்றை charge செய்யும் வசதி பரவலாக நாட்டில் இல்லை என்பது.
குறிப்பிட்ட சில வசதிகளுடன் வாங்கக்கூடிய பெட்ரோல் வாகனமொன்றின் விலையைவிட அதே வசதிகளுடனான மின்னூர்தியின் விலை இங்கு 36 சதவீதம் அதிகம். சராசரி மின் வாகனம் சுமார் 400 கி மீட்டர் range மட்டுமே உள்ளதால் மீண்டும் charge செய்யாமல் பயணத்தை் தொடரமுடியாது. நீண்ட வார இறுதியில் அல்லது விடுமுறையில் ஆஸ்திரேலியர்கள் குறைந்தது 1000/2000 கி மீட்டர் தொலைவு செல்வார்கள் என்ற அடிப்படையில் பார்க்கும்போது charging stations பரவலாக இல்லை என்ற நிலையில் துணிந்து நீண்ட பயணம் ஒன்றை மேற்கொள்ள முடியாது.

epa11264984 Electric cars are charged at an electric vehicle charging station, in Hanoi, Vietnam, 08 April 2024. Vietnam expects to bring net greenhouse gas emissions to zero by 2050, with motor vehicles converting into green energy transportation. EPA/LUONG THAI LINH Credit: EPA
மின் வாகனங்களின் விலையில் மூன்றில் ஒருபகுதி அதன் பட்டரிக்கான விலை என்பதால் பட்டரியின் ஆயுள் குறையக் குறைய மின் வாகனங்களின் re sale value என்ற மறுவிற்பனை செய்யக் கூடிய விலை பலமடங்கு வீழ்ச்சியடையுமென்பதும் பலர் மின்வாகனங்களை வாங்குவதற்குத் தயங்குவதற்கான காரணமாக இருக்கிறது. சாதாரண வாகனமொன்றின் பெறுமதி இரண்டுவருடங்களின் பின்னர் 14 சதவீதம் வீழ்ச்சியடையும் என்ற நிலையில் மின்னூர்திகளின் பெறுமதி இரண்டு வருடங்களின் பின்னர் 42 சதவீதம் வீழ்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
உலக அளவில் பார்க்கும்போது Tesla வைத்தவிர பல பெரிய வாகன உற்பத்தியாளர்கள் மின்னூர்திகளைத் தயாரிப்பதில் பலத்த நஷ்டத்தையே அடைந்து வருகிறார்கள். Tesla EV வாகனங்களை மட்டுமே தயாரிக்கிறது என்பதோடு வெற்றிகரமாகவும் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆஸ்திரேலியாவில் மட்டும் இப்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான Tesla கார்கள் ஓடுகின்றன.
EV என்ற மின்னூர்திகளுக்கான battery technology போதுமான அளவில் வளர்ச்சியடைவில்லை என்பதாலும் இந்த பட்டரிகளுக்கான மூலப்பொருட்களின் விலை அதிகரித்துவிட்டதாலும் மீண்டும் charge செய்யாமல் 1000 கி மீட்டராவது தொடர்ந்து நிலைக்கக்கூடிய பட்டரிகள் இன்னும் பயன்பாட்டிற்கு வராத்தாலும் உடனடியாக மின்னூர்திகளைத் தயாரிப்பதற்காக கோடிக்கணக்கான நிதியை மூலதனம் செய்த அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்கள் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன.
மோட்டார் வாகனத் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஜப்பானில் குறிப்பாக Toyota போன்ற நிறுவனங்கள் இந்த நிலையை சரிவர புரிந்துகொண்டு முற்று முழுதான மின்னூர்திகளைத் தயாரிப்பதற்கான சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை என்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன. 1200 கி. மீ range தரக்கூடிய பட்டரிகள் உருவாகும் வரை இந்த நிலைப்பாட்டிலிருந்து விலகப்போவதில்லை என்பதே அவர்களது முடிவாகும். ஆனால் Toyota நிறுவனம் bz4x என்ற ஒரு மாடலை தற்போது அறிமுகம் செய்திருக்கிறது. இது ஒரு பரிசோதனை முயற்சி என்பதால் இந்த வகை வாகனங்களை பெரிய அளவில் விற்பனை செய்வது Toyota வின் நோக்கமல்ல என்றும் Toyota சொல்கிறது.

FILE - A model stands near a BYD Seal electric car displayed during its launch event in Jakarta, Indonesia, on Jan. 18, 2024. China's burgeoning production of electric cars and other green technologies has become a flashpoint in a new U.S.-China trade fight, highlighted by Treasury Secretary Janet Yellen during her five-day visit to China and seized on by former President Donald Trump in incendiary remarks on the campaign trail. (AP Photo/Achmad Ibrahim, File) Credit: Achmad Ibrahim/AP
AADA Australian automotive dealers association செய்த மதிப்பீடு ஒன்றின் அடிப்படையில் பாரக்கும்போது இன்றைய வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு காரணமாக சுமார் 67 சதவீதமானவர்கள் தமது பழைய கார்களையே தொடர்ந்து பயன்படுத்தும் முடிவில் இருக்கிறார்கள்.
இதே நேரத்தில் பல சீன வாகனங்களின் விலையில் கணிசமான வீழ்ச்சியைக் காணக்கூடியதாக இருக்கிறது. சீன GWM நிறுவனம் தனது Ora மின்னூர்தியின் விலையை 36000 டாலர்களாக்க் குறைத்துள்ளதோடு ஆஸ்திரேலியாவில் வாங்கக் கூடிய மிக மலிவான மின்னூர்தி என்ற விளம்பரத்தையும் செய்து வருகிறது. இதே நேரத்தில் BYD மற்றும் MG போன்ற நிறுவனங்கள் தமது dolphin மற்றும் MG 4 ஆகிய மலிவான மின்னூர்திகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. மலிவாக இருந்தாலும் நம்பகத்தன்மை குறைவு என்ற காரணத்தால் இவற்றை பலர் வாங்கத்தயங்கும் நிலையே நிலவுகிறது.
மின்சாரத்தைத்தவிர வேறு எரிபொருளைப் பயன்படுத்தி இயக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, பெட்ரோல், மின்சாரம் என்பவற்றுக்கு மாற்றாக, Bio diesel, Ethonol, Hydrogen, propane போன்றவை தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. Hydrogen fuel cell, liquid ammonia போன்றவற்றைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்கும் தொழில்நுட்பம் பற்றி பல நிறுவனங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றன. உலகில் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான Toyota இந்தத் துறையில் தொடர்ந்து ஆராய்சிகளைச் செய்தே வருகிறது. ஆனால் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. மின்நூர்த்திகளின் மீது பலருக்கு மோகம் இல்லாமல் இருந்தாலும், உளவியல் அழுத்தம், அரசின் கொள்கை மாற்றம் காரணமாக Electric Car ஓட்டுவோரின் எண்ணிக்கை இன்னும் பத்து ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்கும் என்பதே உண்மை.
—————————————————————————————-
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.