ஆஸ்திரேலியாவிலும் வெளிநாடுகளிலும் சில சமுதாய மக்கள், Pauline Hanson-இன் One Nation கட்சியிடமிருந்து வெளியான ஒரு ஊடக அறிக்கை இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து துக்கத்தையும் குழப்பத்தையும் அனுபவிப்பதாக கூறப்படுகிறது.
பிப்ரவரி 11 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், அக்கட்சியினால் முன்மொழியப்பட்ட குடியேற்றக் கொள்கைகள் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன. அதில் "75,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள்" நாடு கடத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் விசா காலாவதியாகி தங்கியிருப்பவர்கள், சட்டவிரோதமாக வேலை செய்பவர்கள் அல்லது குற்றங்களைச் செய்தவர்கள் உட்பட "சட்டவிரோதமாக" வசிக்கும் 75,000 பேர், Australian Review Tribunal ஆஸ்திரேலிய மதிப்பாய்வு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்படாமல் நாடு கடத்தப்படுவார்கள் என்று One Nation கட்சித் தலைவர் செனட்டர் Pauline Hanson கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

"One Nation, united, strong, and prosperous, celebrates its 11th year." Credit: One Nation Website
தனது குடும்பம் நாடு கடத்தப்படும் அபாயத்தில் இருக்கக்கூடும் என்று மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் Ni-Vanuatu Facebook குழுவை சேர்ந்த ஒருவர் பதிவிட்டுள்ளார்.
"Vanuatu-விலிருந்து வந்த எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக வருந்துகிறேன்" என்று மற்றொருவர் பகிர்ந்து கொண்டார்.
One Nation கட்சியின் இந்த கொள்கை அறிவிப்பை அமெரிக்காவில் குடியேற்றம் மீதான அந்நாட்டு அதிபர் Donald Trump-இன் கடும் நடவடிக்கைகளுடன் இணைத்து பல பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன.
"ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் மக்களை நாடு கடத்தவும் Trump ஆஸ்திரேலியாவுக்கு உத்தரவிட்டுள்ளார்" என்று SBS Bislama கண்ட ஒரு பதிவில் இருந்துள்ளது.
சமூக ஊடகங்களில் இந்த அறிவிப்பைப் பார்த்த Timor-Leste -ஐ சேர்ந்த இரண்டு குடியேற்ற தொழிலாளர்களான லியோ மற்றும் மரியா* ஆகியோருடன் SBS Tetum உரையாடியுள்ளது.
"ஆஸ்திரேலியாவுக்கு நாங்கள் வந்துள்ளது தாயகத்தில் உள்ள எங்கள் குடும்பங்களின் நலனுக்காக மட்டும் தான். இதுவரை, நாங்கள் இந்நாட்டு விதிகளைப் பின்பற்றி வருகிறோம், ஆனால் இந்தச் செய்தி எங்களுக்கு மிகவும் கவலையளிக்கிறது," என்று அவர்கள் கூறினர்.
இந்த ஆவணம் இணையத்தில் பரவத் தொடங்கியபோது தனக்கு பலர் விசாரித்து தொடர்புகொண்டதாக குடியேற்ற தொழிலாளர்களுக்கு ஆதரவுதவி வழங்கி வரும் ACRATH ஐ (Australian Catholic Religious Against Trafficking in Humans) சேர்ந்த Carla Chung கூறினார்.
"Pauline Hanson -இன் ஊடக அறிக்கையைப் பார்த்தபோது தொழிலாளர்கள் மிகவும் மன அழுத்தத்திலும் மனச்சோர்விலும் இருந்ததைக் கண்டேன்," என்று அவர் கூறினார்.
"இது அரசு வெளியிட்ட அறிவிப்பு அல்ல. இது ஒரு சிறுபான்மைக் கட்சியின் கொள்கை மட்டுமே என்று நான் அவர்களிடம் கூறினேன்... கவலைப்பட வேண்டாம், உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள் என்று நான் அவர்களிடம் கூறினேன்."
"தங்களின் கட்சியின் அறிக்கை தவறாக வழிநடத்துவதாகக் கூறப்படும் எந்தவொரு குற்றச்சாட்டும் கட்சிக்குத் தெரியாது, மேலும் இந்த அறிக்கை 'துன்பத்தை' ஏற்படுத்தியதாகக் கூறும் எந்த 'குடியேற்ற சமூகத்தையும்' One Nation அறிந்திருக்கவில்லை" என்று SBS Examines-இடம் One Nation செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இணைப் பேராசிரியர் Anna Boucher, சிட்னி பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கை மற்றும் அரசியல் அறிவியலில் மூத்த விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார், மேலும் Skilled Migration திறன் அடிப்படையிலான குடியேற்றம் குறித்த பெடரல் அரசின் அமைச்சக ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
இந்த அறிக்கை சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தாலும், இது One Nation கட்சியின் ஒரு உத்தி என்று கூறுகிறார் இணைப் பேராசிரியர் Anna Boucher.
இந்த செய்திக்குறிப்பு பெரும்பாலும் "அவர்களின் ரசிகர் பட்டாளத்தை" குறிவைத்து வெளியிடப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
இந்த அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கொள்கைகள் "பயனுள்ளவையாகவோ அல்லது செயல்படுத்தக்கூடியவையாகவோ" இருக்க வாய்ப்பில்லை என்று அவர் SBS Examines-இடம் கூறினார்.
பெருமளவில் நாடு கடத்தப்படுவது எளிதானது அல்ல என்றும், "Administrative Review Tribunal நிர்வாக மதிப்பாய்வு தீர்ப்பாயத்திற்கு மேல்முறையீடு செய்யும் உரிமையை நீக்க" One Nation கட்சிக்கு அதிகாரம் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
LISTEN TO

Migrants aren't being hired in the jobs they're qualified for. It's costing Australia billions
SBS English
04/11/202406:15
சாதனை அளவிலான தற்போதைய குடியேற்றவாசிகள் எண்ணிக்கை நாட்டின் வீட்டுவசதி நெருக்கடியை மோசமாக்குவதற்கும், பணவீக்கத்தை அதிகரிப்பதற்கும், பொது சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை பெருமளவில் குறைப்பதற்கும் காரணமாகும் என்றும் One Nation அறிக்கை தெரிவித்துள்ளது.
குடியேற்றம், வீட்டுவசதி பற்றாக்குறை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆதரிக்கும் தரவுத் தொகுப்புகள் அல்லது தகவல்களை வழங்குமாறு கேட்டபோது, ABC-இன் பகுப்பாய்வுக் கட்டுரை மற்றும் The Australian செய்தித்தாளின் ஒரு பகுதி இணைப்புகளை One Nation கட்சியின் செய்தித் தொடர்பாளர் SBS Examines-இடம் வழங்கியுள்ளார்.
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் Crawford School of Public Policy -இல் Emeritus Professor Peter McDonald , குடியேற்றம் வீட்டுவசதி நெருக்கடியில் சிறிதளவு தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளதாக SBS Examines-இடம் கூறினார்.
வீடு வாங்குதல் மற்றும் வாடகை சந்தைகளில் குடியேற்றவாசிகள் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்துவதாகவும், குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது இந்தப் பிரச்சினையைச் சரிசெய்யாது என்றும் அவர் கூறினார்.
வீடுகள் பற்றாக்குறைதான் இதற்கு காரணம் என்கிறார் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் நகர்ப்புற திட்டமிடல் இணைப் பேராசிரியர் டாக்டர் Dorina Pojani.
"2000 -ஆம் ஆண்டு முதல், தேவைக்கேற்ப நாட்டில் புதிய வீடுகளை கட்டுவதை நாங்கள் நிறுத்திவிட்டோம், அன்றிலிருந்து விலைகள் உயர்ந்து வருகின்றன."
LISTEN TO

Is immigration worsening the housing crisis?
SBS English
15/07/202405:09
Pauline Hanson-இன் One Nation ஒரு சிறிய கட்சி, மேலும் அரசு அமைக்கவோ அல்லது சொந்தமாக கொள்கைகளை செயல்படுத்தவோ போதுமான உறுப்பினர்கள் அக்கட்சியில் இல்லை.
ஆனால், "இந்த வகையான பயமுறுத்தும் பேச்சு" சமூக ஒற்றுமையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தனக்கு கவலைகள் இருப்பதாக இணை பேராசிரியர் Boucher கூறினார்.
"இப்படியான சிறு கட்சிகளின் அறிக்கைகள் காலப்போக்கில் குடிவரவு குறித்த உரையாடல் பொதுவாக ஆஸ்திரேலியாவில் மிகவும் விரும்பத்தகாத மற்றும் தீவிரமான நிலைப்பாட்டிற்கு தள்ளக்கூடும். இது முக்கிய கட்சிகளில் ஒன்றை இந்தக் கருத்துக்களில் சிலவற்றை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கக்கூடும்." என்று அவர் கூறினார்.
LISTEN TO
Living in limbo
SBS English
07/10/202407:12
* Names have been changed