பெற்றோர் விசாவுக்கான நிபந்தனையில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படுகிறது!

Australian Visa

Australia to extend subclass 476 visas for 24 months. Source: AAP

கொரோனா பரவல் காரணமாக பயணக்கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் சில ஆஸ்திரேலிய விசாக்களுக்கான நிபந்தனைகளில் தளர்வுகள் அல்லது சலுகைகளை அரசு நடைமுறைப்படுத்தியிருந்தமை நமக்குத் தெரியும்.

அந்தவரிசையில் பெற்றோர் விசாவுக்கான நிபந்தனையிலும் தற்காலிக தளர்வு ஒன்றை அரசு அறிமுகப்படுத்துகிறது.

இதன்படி வெளிநாடுகளில் இருந்தவாறு parent (subclass 103) visa, contributory parent (subclass 173) & (subclass 143) visa பிரிவுகளின் கீழ் பெற்றோர் விசாக்களுக்கு விண்ணப்பித்தவர்கள் அந்த விசா வழங்கப்படும்போது ஆஸ்திரேலியாவுக்கு வெளியே இருக்கவேண்டும் என்ற நிபந்தனையில் தளர்வுகொண்டுவரப்படுகிறது. குறித்த விசாக்கள் அங்கீகரிக்கப்படும்போது அவர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தவாறே இந்த விசாக்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

பொதுவாக பெற்றோர் விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு அதற்காக மிக நீண்ட காலம் காத்திருக்கவேண்டும் என்பதால் இக்காலப்பகுதியில் பெற்றோர், சுற்றுலா விசா உட்பட வேறு தற்காலிக விசாக்களில் ஆஸ்திரேலியா வந்து தங்கியிருப்பது வழக்கம்.

ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்தாலும் அவர்களது விசா அங்கீகரிக்கப்படும்போது அவர்கள் வெளிநாட்டில் இருக்கவேண்டும் என்பது பெற்றோர் விசாவுக்கான நிபந்தனைகளில் ஒன்றாகும்.

முன்னதாக Partner (subclass 309) visa, Prospective Marriage (subclass 300) visa, Child (subclass 101) visa, Adoption (subclass 102) visa, Dependent Child (subclass 445) visa போன்ற விசா பிரிவுகளின் கீழ் விண்ணப்பித்தவர்கள் அந்த விசாவைப் பெறும்போது ஆஸ்திரேலியாவுக்கு வெளியே இருக்கத் தேவையில்லை என்பதான தளர்வை அரசு அறிமுகப்படுத்தியிருந்தது.

அரசு இந்த சலுகையை பெற்றோர் விசாவுக்கு வழங்காததையடுத்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், வயதான பெற்றோர் பலர் தமது விசாவைப் பெற்றுக்கொள்வதற்காக கொரோனா பரவலுக்கு மத்தியில் வெளிநாடு செல்லவேண்டியுள்ளதாகவும், அரசின் இச்செயல் நியாயமற்ற ஒன்று எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்தப்பின்னணியில் parent (subclass 103) visa, contributory parent (subclass 173) & (subclass 143) visa ஆகிய பிரிவுகளின்கீழ் விசாவுக்கு விண்ணப்பித்தவர்கள் அந்த விசாக்கள் வழங்கப்படும்போது ஆஸ்திரேலியாவிலேயே இருக்கமுடியும் என்பதான தளர்வு இன்னும் சில மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Share
Published 29 January 2021 3:20pm
Updated 29 January 2021 3:32pm

Share this with family and friends