நீராவிக்குளியல் மூலம் கொரோனாவுக்கு மருத்துவமளிப்பதாக விளம்பரம் செய்து தன்னிடம் சிகிச்சை பெற வந்தவர்களிடம் தலா ஆயிரம் டொலர்கள் அறிவிட்ட பெர்த் cosmetic and complementary GP-க்கு சுகாதார அதிகாரிகள் 37 ஆயிரத்துக்கு 800 டொலர்கள் அபராதம் விதித்துள்ளனர்.
ஆனால், தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகைக்கு எதிராக தான் மேன்முறையீடு செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸை உடம்பிலிருந்து அழிப்பதற்கான நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகக்கூறி, ஊக்கப்பவுடர் வழங்கி ஆழந்த தூக்கத்துக்கு இட்டுச்செல்லுதல், நீராவிக்குளியல் வழங்குதல் உட்பட பல சிகிச்சைமுறைகளை இவர் மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி குற்றச்சாட்டுகளின் பேரில், இவருக்கு விதிக்கப்பட்ட 15 அபராதங்களை கடந்த ஜூன் மாதம் செலுத்தியிருக்கின்றபோதும், இதற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாகவும் தான் எந்த தப்பான காரியங்களிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் சனல் 9 தொலைக்காட்சியின் 'A Current Affair' நிகழ்ச்சியிடம் கூறியுள்ளார்.