வெளிநாடுகளிலிருந்து தங்கள் பெற்றோரை ஆஸ்திரேலியாவுக்கு வரவழைக்க விரும்புபவர்கள், அதிகம் சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தவல்ல நடைமுறை ஒன்றை, கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் அரசு அறிமுகம் செய்துள்ளநிலையில், இதற்கெதிராக ஒன்று நடத்தப்படுகிறது.
இதுவரைகாலமும் தங்களது பெற்றோரை ஆஸ்திரேலியாவுக்கு அழைக்க விரும்பும் கணவனும் மனைவியும் கூட்டாக, 45 ஆயிரத்து 185 டொலர்களை ஆண்டு வருமானமாக பெறுபவர்களாக இருக்கவேண்டும் என்ற நடைமுறையை மாற்றி, இந்த கூட்டுவருமான தொகையை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 475 டொலர்களாக அரசு அதிகரித்துள்ளது.
அதேபோல, தனி நபர் ஒருவர் தனது பெற்றோரை ஆஸ்திரேலியாவுக்கு அழைப்பதானால், அவர் ஆண்டொன்றுக்கு 45 ஆயிரத்து 185 டொலர்கள் வருமானம் ஈட்டுபவராக இருக்கவேண்டும் என்ற பழைய சட்டம் திருத்தப்பட்டு, அவர் 86 ஆயிரத்து 606 டொலர்களை ஆண்டு வருமானமாக பெறுபவராக இருக்கவேண்டும் என்ற மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தப்பின்னணியில் அரசு கொண்டுவந்துள்ள இம்மாற்றம் புலம்பெயர் சமூகத்தவர்களை மிகமோசமாகப் பாதிக்கும் ஒன்று எனச் சுட்டிக்காட்டியுள்ள குடிவரவு முகவர்கள், இந்நடைமுறையினை மாற்ற வேண்டுமென வலியுறுத்தி ஊடாக கையெழுத்துக்களைத் திரட்டிவருகின்றனர்.
இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.