இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை மெல்பன் Diggers Rest பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் குறாலி பிரதேசத்தைச் சேர்ந்த Nirvair Singh என்ற இளம் பாடகரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த Nirvair Singh சிறந்த பாடகர் என்பதுடன் பஞ்சாப் மொழியில் இவர் பாடிய பல பாடல்களுக்கு உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
ஒருபுறம் பாடகராகவும் மறுபுறம் வாடகை வாகன ஓட்டுனராகவும் பணிபுரிந்து வந்த Nirvair Singh, இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
Nirvair Singh உயிரிழந்த விபத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் பொலீஸார் கைது செய்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்திலேயே Nirvair Singh உயிரிழந்துள்ளார். விபத்தில் சம்பந்தப்பட்ட இன்னொரு வாகனத்திலிருந்தவர் சிறுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Nirvair Singh மறைவு ஆஸ்திரேலிய இந்திய சமூகத்தை மாத்திரமல்லாமல், இந்திய இசை ரசிகர்களை பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
——————————————————————————————
Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14.
More information and support with mental health is available at and on 1300 22 4636.
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.