குயின்ஸ்லாந்தில் 12 மாதத்தில் $33 ஆயிரத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்ட ஓட்டுநர்!!

12 மாத காலப்பகுதியில் ஒரு தனிநபருக்கு அதிக எண்ணிக்கையிலான வாகன ஓட்டுதல் விதிமீறல் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Driving and phones ... a bad mix

Source: AAP

குயின்ஸ்லாந்து ஓட்டுநர் ஒருவருக்கு சாலையில் வாகனம் ஓட்டி செல்லும்போது தனது மொபைல் போனை திரும்பத் திரும்பப் பயன்படுத்தியதற்காக $33,000 மதிப்புள்ள அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1, 2021 முதல் அக்டோபர் 31, 2022 வரை தனிநபர் ஒருவருக்கு அதிக எண்ணிக்கையிலான விதிமீறல் நோட்டீஸ்கள் இந்த வாகன ஓட்டிக்கு வழங்கியதாக குயின்ஸ்லாந்து போக்குவரத்து மற்றும் பிரதான சாலைகள் துறையின் தரவு காட்டுகிறது.

மொபைல் போன் கண்டறிதல் கமராக்களைப் பயன்படுத்தி அந்த நபர் 31 முறை பிடிபட்டுள்ளார். அதே நேரத்தில் 38 மொபைல் போன் பாவனை விதிமீறல் நோட்டீஸ்கள் ஒரு நிறுவன காரை ஓட்டி வந்த ஓட்டுநர்களுக்கும் வழங்கப்பட்டதாக துறையின் தரவு காட்டுகிறது.

மொபைல் போன் கண்டறிதல் கமராக்களைப் பயன்படுத்தி அந்த நபர் 31 முறை பிடிபட்டுள்ளார்.
ஒரு கையடக்கத் தொலைபேசி பாவனை விதிமீறலின் விலை நான்கு demerit புள்ளிகளுடன் $1078 டாலர் அபராதம் என்று திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது கார் விபத்துக்களுக்கு மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வாகனம் ஓட்டும் போது கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவது 0.07- 0.10 என்ற இரத்தத்தில் உள்ள மது அளவுடன் வாகனம் ஓட்டுவது போன்ற ஆபத்தானது.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 14 February 2023 2:01pm
By Selvi
Source: SBS


Share this with family and friends