உலகின் No.1 பாஸ்போர்ட் எது தெரியுமா?

Pp

Source: iStock

வீசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்/கடவுச்சீட்டுகள் எவை என்ற புதிய பட்டியலை Henley Passport Index நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி உலகின் அதிசக்தி வாய்ந்த கடவுச்சீட்டு என்ற பெருமையை ஜப்பான்  கடவுச்சீட்டு பெறுகிறது. இதைப் பயன்படுத்தி 189 நாடுகளுக்கு வீசா இல்லாமல் சென்றுவரலாம்.

இரண்டாம் இடத்தில் ஜேர்மனி மற்றும் சிங்கப்பூர் கடவுச்சீட்டுகள் காணப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி 188 நாடுகளுக்குச் செல்லலாம்.

மூன்றாம் இடத்தில் பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், சுவீடன், தென்கொரியா (187 நாடுகள்) 4வது இடத்தில் இங்கிலாந்து, நோர்வே, லக்சம்பேர்க், ஆஸ்திரியா, நெதர்லாந்து, போர்த்துகல், அமெரிக்கா (186 நாடுகள்) ஐந்தாவது இடத்தில் கனடா, பெல்ஜியம், டென்மார்க், அயர்லாந்து, சுவிட்சர்லாந்து (185 நாடுகள்) ஆகியன காணப்படுகின்றன.

ஆஸ்திரேலியா மற்றும் கிரீஸ் கடவுச்சீட்டுகள் 6 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.


Share
Published 3 June 2018 1:51pm
Updated 3 June 2018 2:22pm
Presented by Renuka


Share this with family and friends