'அதிக வேகம்' என்று போலீசார் கணிக்கும் வேகத்தில் வாகனம் ஓட்டினால் ஒருவர் ஓட்டுனர் உரிமத்தை அல்லது லைசென்சை போலீசார் பிடிபடும் இடத்திலேயே ரத்து செய்வது மட்டுமல்ல, மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் வகையிலும் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சட்டம் கடந்த ஆண்டு 2021 டிசம்பரில் மாநில நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த புதிய சட்டமும், நடைமுறையும் இந்த வாரம் நடைமுறைக்கு வருகிறது.
மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும்,முதன் முதலாக குற்றம் செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்படும்.
சாலைகளில் குறிப்பிட்ட வேகத்தில் வாகனத்தை ஓட்டாமல் மணிக்கு 55 கிமீ அல்லது மேலதிகமாக வாகனம் ஓட்டுவது 'அதிக வேகம்' என வரையறுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, மணிக்கு 60 கிமீ வேகத்தில் வாகனம் ஓட்ட வேண்டிய இடத்தில் ஒருவர் அதையும் தாண்டி மணிக்கு 55 கிமீ அல்லது அதற்கும் அதிகமாக வாகனம் ஓட்டுவது 'அதிக வேகம்' என வரையறுக்கப்பட்டுள்ளது. அல்லது மணிக்கு 60கிமீ க்கும் மேல் ஓட்டலாம் என்ற மண்டலங்களில், 'அதிக வேகம்' என்பது, மணிக்கு 80 கிமீக்கு மேல் அல்லது அதற்கு மேல் ஓட்டுவது என வரையறுக்கப்பட்டுள்ளது.

Man driving right-hand-drive car. Source: Getty / John Lamb/Getty Images
வேகமாக வாகனம் ஓட்டி இப்படியாக தண்டிக்கப்படுவோருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும்,முதன் முதலாக குற்றம் செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்படும். தொடர்ந்தும் வாகன வேகம் தொடர்பாக குற்றம் செய்தால், ஓட்டுனர் உரிமம் அல்லது லைசென்ஸ் ஐந்து ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டு ஒருவர் சில சூழ்நிலைகளில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையையும் எதிர்கொள்ள நேரிடலாம்.
தெற்கு ஆஸ்திரேலிய காவல்துறைக்கு வேகமாக வாகனம் ஓட்டும் ஓட்டுநரின் உரிமத்தை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் முன்பு இருந்தாலும், தற்போதைய புதுப்பிக்கப்பட்ட சட்டங்கள் இப்போது காவல்துறைக்கு அப்படியான அதிகாரத்தை எளிதாக பயன்படுத்த வாய்ப்பை வழங்குகின்றன.
——————————————————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.