NSW மாநிலத்தில் கமரா எச்சரிக்கை பலகைகளை நீக்கியதிலிருந்து அபராத தொகை பல மடங்கு அதிகரிப்பு!

Mobile speed camera

Mobile speed camera Source: AAP Image

நியூ சவுத்வேல்ஸ் மாநில வீதிகளில் நிறுவப்பட்டுள்ள Mobile Speed கமரா முன்னெச்சரிக்கைப் பலகைகள் கடந்த நவம்பர் மாதம் நீக்கப்பட்டதிலிருந்து, வாகன ஓட்டுனர்களினால் மாநிலத்திற்கு கிடைக்கப்பெறும் அபராதம் பலமடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாத காலப்பகுதியில் சுமார் நான்கு லட்சம் டொலர்களை தண்டப்பண வருமானமாக ஈட்டிய நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு, Mobile Speed camera கமரா எச்சரிக்கை பலகைகளை நீக்கியபிறகு 2020 டிசெம்பர் காலப்பகுதியில் 25 லட்சம் டொலர்களை பெற்றுள்ளது.

இவ்வாறு பெருமளவு வருமானத்தை ஈட்டிக்கொடுப்பதற்கு காரணமான புதிய ரக கமராக்கள் தற்போது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் பாவனையில் உள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் போக்குவரத்து திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்புதிய ரக கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இரகசியமான இடங்களிலிருந்து வீதியின் இரண்டு பக்கங்களிலும் விதிகளை மீறுகின்ற வாகனங்களை படம்பிடிப்பதற்கான வசதி தற்போதுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Share
Published 10 February 2021 1:34pm

Share this with family and friends