ஆஸ்திரேலியாவுக்கு எப்பொருட்களைக் கொண்டு வந்தால் திருப்பி அனுப்பப்படுவீர்கள்?

ஆஸ்திரேலியாவில் சுங்கச் சட்டங்களை மீறும் போது அவர்கள் அபராதம், சிறைத் தண்டனை மற்றும் சில சந்தர்ப்பங்களில் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.

A man walking past a window at an airport. There are planes parked outside.

Australia is notoriously strict when it comes to going through customs at the airport, with rules about what can be brought in. But some people still try to push the limits. Source: Getty / Mark Evans

KEY POINTS:
  • உலகிலேயே மிகவும் கடுமையான சுங்க விதிகள் ஆஸ்திரேலியாவில் உள்ளன.
  • ஆஸ்திரேலியாவிற்குள் கொண்டு வரக்கூடிய பல கட்டுப்பாடுகள் நாட்டின் பல்லுயிர்(biodiversity) பாதுகாப்பைப் பற்றியது.
கற்பனை செய்து பாருங்கள், உலகின் பாதித் தூரம் பயணித்துவந்து தடைசெய்யப்பட்ட ஒரு பொருள் காரணமாக திரும்பிச் செல்லுங்கள் என்று கூறினால் எப்படியிருக்கும்?

இறைச்சி மற்றும் சீஸ் எடுத்துவந்த நினைவிருக்கலாம்.

ஆஸ்திரேலியாவிற்குள் நுழையும் நபர்கள், incoming passenger card என அறியப்படுவதை நிரப்புகிறார்கள். இதில் ஒரு நபர் தங்களுடன் நாட்டிற்குள் கொண்டு வரும் பொருட்களின் வகைகள் கேட்கப்படுகின்றன.
இதன்மூலம் பயணிகள் தங்களிடம் உள்ள பொருட்களை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துகின்றனர். ஆனால் உலகிலேயே அதிக கடுமையான சுங்க விதிகள் காரணமாக, ஆஸ்திரேலியாவிற்குள் நீங்கள் சரியாக என்ன கொண்டு வர முடியும்? மேலும் எவற்றைக் கொண்டுவர முடியாது?

விலங்குகள்

ஆஸ்திரேலியாவிற்குள் கொண்டு வரக்கூடிய பல கட்டுப்பாடுகள் நாட்டின் பல்லுயிரியலைப் பாதுகாப்பது பற்றியதாகும். கடுமையான உயிரியல் தொடர்பிலான பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் பூச்சிகள் மற்றும் நோய்கள் நுழையும் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.

முன்பு 2018 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி விவசாயத் துறையின் செய்தித் தொடர்பாளர் பேசினார். இது ஆஸ்திரேலியாவின் விமான நிலையங்களில் உயிரியல் பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்த மிகவும் ஆச்சரியமான மற்றும் தீவிரமான நிகழ்வுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய குடியிருப்பாளர் ஒருவர் உயிருள்ள அணில்களை தனது உடலில் மறைத்துக்கொண்டு பாலியிலிருந்து பிரிஸ்பேன் வந்தடைந்தார்.

An Indonesian squirrel on a branch of a banana tree.
A man travelling home to Australia from Bali was found with a squirrel. Source: Getty / NurPhoto
“Squirrels can carry rabies — which is present in Bali — and if this disease was to arrive here, the toll on human and animal health would be huge,” the Department's Dr Chris Walker said in 2021 when reflecting on some of the more interesting finds.

அந்த நபருக்கு 18 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அவர் ஐந்து ஆண்டுகள் நல்ல நடத்தையுடன் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.

உணவு

கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்தால் சில உணவுப் பொருட்கள் ஆஸ்திரேலியாவிற்குள் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது. வணிக ரீதியாக தயாரிக்கப்படும் biltong அல்லது jerky பொதுவாக அனுமதிக்கப்படுகிறது. அனல் அது பன்றி இறைச்சியிலிருந்து தயாரிக்கப்பட்டால் அது அனுமதிக்கப்படமாட்டாது.
இதேவேளை சுவாரசியமான ஒரு விடயம் என்னவென்றால், நியூசிலாந்தில் இருந்து தகரத்தில் அடைக்கப்படாத இறைச்சி சில நிபந்தனைகளுக்கு இணங்கினால் நாட்டிற்குள் கொண்டு வர முடியும், ஆனால் விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவு எதுவும் அனுமதிக்கப்படாது என்பதாகும்.

கடந்த வருடம் பிரிஸ்பன் விமான நிலையத்தில் தரித்துநின்ற விமானம் ஒன்றுக்குள் பணியாற்றச்சென்ற பொறியியலாளர்கள் திரும்பும்போது அதிலிருந்த உணவுவகைகளை எடுத்துவந்தனர். பிரட் ரோல்ஸ், க்ரிஸ்ப்ஸ், சாக்லேட்கள், தயிர் மற்றும் இறைச்சி பொருட்கள் அடங்கிய விமான உணவுகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் நிறைந்த பையுடன் ஒருவர் காணப்பட்டதை அடுத்து, அவர் எச்சரிக்கப்பட்டார்.
Plane food items laid out on the ground.
The airport worker found with these plane food items in a duffle bag risked a fine of thousands of dollars. Source: Supplied / Australian Border Force
அந்த நேரத்தில், இதுபோன்ற செயல்களுக்கு $111,000 வரை அபராதம் விதிக்கலாம்.

விமானத்தில் இருந்து வந்த பணிப்பெண்ணிடமிருந்து பாண் போன்ற பொருட்களைப் பெற்ற மற்றொரு நபருக்கு $3,300 அபராதம் விதிக்கப்பட்டது.

தாவரப் பொருட்கள்

2020 ஆம் ஆண்டில், COVID-19 தொற்று காரணமாக ஆஸ்திரேலியா தனது சர்வதேச எல்லைகளை மூடுவதற்கு முன்பு, இரண்டு பயணிகள் தனித்தனியாக சிட்ரஸ் பழங்களை கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. இது ஆஸ்திரேலிய சிட்ரஸ் தொழிலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய pathogen நோய்க்கிருமியைக் கொண்டிருக்கலாமென நம்பப்பட்டது.
ஒரு நபர் ஒரு கிலோகிராம் தேசிக்காயும் மற்றொருவர் ஓரளவு காய்ந்த சிட்ரஸ் தோலையும் கொண்டு வந்தார். இவை அனைத்தும் சிட்ரஸ் நோய்க்கிருமியை கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

குறித்த பொருட்கள் அழிக்கப்பட்டன. மேலும் அவற்றை தங்கள் பொதிகளில் வைத்திருந்தவர்கள் அதுபற்றி முன்கூட்டியே அறிவித்ததால், அவர்கள் அபராதம் வசூலிக்கப்படுவதைத் தவிர்த்தனர்.

புகையிலை

2019 ஆம் ஆண்டில், எட்டு சீன ஆண்கள் 170,000 அறிவிக்கப்படாத சிகரெட்டுகளை ஆஸ்திரேலியாவிற்குள் கொண்டு வர முயன்றனர். இதனால் அவர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

ஒரு சிறிய அளவிலான புகையிலை மற்றும் மதுபானங்களை வரிக் கட்டணம் செலுத்தாமல் நாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்றாலும், இவை அறிவிக்கப்பட வேண்டும்.
A list of the items travellers must declare on entry to Australia.
A list of items travellers must declare on entry. Source: SBS
18 வயதுக்கு மேற்பட்ட பயணிகள், 25 சிகரெட்டுகள் வரையுள்ள திறக்கப்படாத ஒரு பாக்கெட்டும், ஒரு திறந்த சிகரெட் பாக்கெட்டும் வைத்திருக்கலாம்.

இது ஒரு வரி இல்லாத சலுகையாகக் கருதப்படுகிறது, எனவே அதை விட அதிகமாக கொண்டு வரும் எவரும் அவற்றுக்கு வரி செலுத்த வேண்டும்.

நீங்கள் கொண்டுவரும் பொருட்கள் பற்றி அறிவிக்கும்போது..

பட்டியலிடப்பட்டுள்ள பொருட்கள் தங்களிடம் இல்லை என்று தெரிவித்திருக்கும் பின்னணியில் அவை கண்டறியப்பட்டால், .

சுங்க ஊழியர்கள் பொருட்களைப் பற்றி மேலும் கேள்விகளைக் கேட்கலாம் மற்றும் உயிரியல் பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை மதிப்பீடு செய்யலாம்.

பல சந்தர்ப்பங்களில், அறிவிக்கப்பட்ட பொருட்களை அவர்கள் பரிசோதித்தவுடன் திருப்பித் தருவார்கள்.

மரச் செதுக்கல்கள் போன்ற சில பொருட்கள், அவற்றைப் பாதுகாப்பாக வைக்க சிகிச்சை தேவைப்படலாம், மேலும் சில பொருட்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையவே அனுமதிக்கப்படுவதில்லை.

அதிகாரிகள் இவற்றைக் கைப்பற்றினால், அவை ஏற்றுமதி செய்யப்படலாம் அல்லது அழிக்கப்படலாம்.

விமான நிலையங்களில் குறிக்கப்பட்ட தொட்டிகள் உள்ளன. தாங்கள் கோர விரும்பாத பொருட்களை அப்புறப்படுத்த பயணிகள் அவற்றைப் பயன்படுத்தலாம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share
Published 31 January 2023 7:43pm
By Maheswaran Prabaharan
Source: SBS


Share this with family and friends