ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்ட மாற்றத்தின் கீழ் ஆஸ்திரேலிய விசா ஒன்றுக்கு விண்ணப்பிக்கும் போது, தவறான தகவல்களை வழங்குபவர்கள், சுமார் 10 வருடங்களுக்கு விசா விண்ணப்பம் தாக்கல் செய்ய முடியாதவாறு தடை செய்யப்படலாம்.
இதன்படி ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ தனது விசா விண்ணப்பம் தொடர்பில் தவறான தகவல்கள், பொய்யான ஆவணங்கள் போன்றவற்றை சமர்ப்பித்தால், அவர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.
இதுவரை காலமும் 12 மாதங்களாக இருந்த தண்டனைக் காலப்பகுதி, தற்போது 10 ஆண்டுகளாக்கப்பட்டுள்ளது.
மாணவர் விசா, பெற்றோர் விசா, வேலை விசா என சகல விதமான விசா விண்ணப்பங்களுக்கும் இது பொருந்தும்.
நவம்பர் 18ம் திகதி முதல் இம்மாற்றம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், இதை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை தாம் செனற் அவையில் மேற்கொள்ளவிருப்பதாக கிரீன்ஸ் கட்சி தெரிவித்துள்ளது.