உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் (கடவுச் சீட்டு) எது? என்று உங்களிடம் கேட்டு, நீங்கள் ஜப்பான் என்று பதில் தந்தால், உங்கள் பதில் சரி. இரண்டாம் இடத்தை சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா நாடுகள் பிடித்துள்ளன. ஆஸ்திரேலியா எட்டாம் இடத்தையே பிடித்துள்ளது.
ஜப்பான் பாஸ்போர்டுடன் 193 நாடுகளுக்கு முதலிலேய விசா வாங்காமல் பயணம் செய்யலாம். அந்த வகையில் உலகிலுள்ள அனைத்து நாடுகளோடும் ஒப்பிட்டால் ஜப்பான் கடவுச் சீட்டு சர்வதேச பயணத்திற்கு சிறந்த பாஸ்போர்ட் என்று பார்க்கப்படுகிறது.
இரண்டாம் இடத்தை பிடித்துள்ள சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா நாடுகளின் பாஸ்போர்டுடன் 192 நாடுகளுக்கு முதலிலேய விசா வாங்காமல் பயணம் செய்யலாம்.
& பார்ட்னர்ஸ் எனும் லண்டனை தளமாகக் கொண்ட முதலீட்டு இடம்பெயர்வு ஆலோசனை நிறுவனம் உலகின் கடவுச் சீட்டுகளின் பலத்தை வரிசைப்படுத்தியுள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (ஐஏடிஏ) தரவுகளை ஆதாரமாகக் கொண்டு ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனம் 199 உலக நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை ஆய்வு செய்து ஒவ்வொரு நாட்டின் பாஸ்போர்டுடன் மொத்தமுள்ள 227 பயண இடங்களுக்கு அல்லது எத்தனை நாடுகளுக்கு தடைகளின்றி பயணம் செய்யலாம் என்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா முதல் ஐந்து இடங்களில் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஆஸ்திரேலியா எட்டாம் இடத்தையே பிடித்துள்ளது. கனடா, செக், கிரீஸ், மால்டா எனும் நாடுகளின் பாஸ்போர்ட்களும் எட்டாம் இடத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்துகொள்கின்றன. ஆஸ்திரேலியா கடவுச் சீட்டுடன் 185 நாடுகளுக்கு முன்னரே விசா வாங்காமல் பயணம் செய்யலாம்.
அதேவேளையில் ஆஸ்திரேலியாவின் அருகாமை நாடான நியூ சிலாந்து நாடும், அமெரிக்காவும் எலாம் இடத்தைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் கடவுச் சீட்டுகளுடன் 185 நாடுகளுக்கு முன்னரே விசா வாங்காமல் பயணம் செய்யலாம்.
மலேசியா 13 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மலேசிய கடவுச் சீட்டுடன் 179
நாடுகளுக்கு முன்னரே விசா வாங்காமல் பயணம் செய்யலாம்.
இந்தியா 87ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியக் கடவுச் சீட்டுடன் 60 நாடுகளுக்கு முன்னரே விசா வாங்காமல் பயணம் செய்யலாம்.
இலங்கை 103ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை கடவுச் சீட்டுடன் 42 நாடுகளுக்கு முன்னரே விசா வாங்காமல் பயணம் செய்யலாம்.