ஆஸ்திரேலிய அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே பிரியா - நடேஸ் தம்பதிகள் மற்றும் அவர்கள் குழந்தைகள் பற்றிய செய்தி கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரியாவுக்கு 'Woman of the Year' என்ற கௌரவத்தை ஆஸ்திரேலியாவின் முக்கிய மாதர் சஞ்சிகையொன்று வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த நிலையில், அதற்கெதிராக முழுக்குடும்பமும் போராடியது, இப்போதும் போராடிக்கொண்டிருக்கிறது. இவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் பல தரப்புகளிலிருந்தும் ஆதரவுக்கரம் நீட்டப்பட்டது.
இந்தப்பின்னணியில், தனது குடும்பத்தின் இருப்புக்காக போராடிய பிரியாவுக்கு ஆஸ்திரேலியாவின் முக்கிய மாதர் சஞ்சிகையான Marie Claire, 'Women Of The Year' என்ற கௌரவத்தை வழங்கியுள்ளது.
பிரான்ஸில் 1937 இல் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு நாடுகளிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் Marie Claire என்ற இந்த சஞ்சிகையின் ஆஸ்திரேலிய பதிப்பு, பிரியா உட்பட 9 பெண்களுக்கும், பிரியா குடும்பத்தின் விடுதலைக்காக போராடிய The Women of Biloela என்ற குழுவுக்கும், இந்த கௌரவத்தை தமது டிசம்பர் மாத சஞ்சிகை ஊடாக வழங்கியுள்ளது.

Source: Marie Claire- Frances Andrijich
பிரியாவுடன் Grace Tame, Brittany Higgins, Ash Barty, Ellie Cole, Emma McKeon, Shareena Clanton, Charlee Fraser, Christine Holgate, Chanel Contos ஆகிய பெண்களுக்கு சாதனைப்பெண்கள் என்ற கௌரவத்தை இந்த சஞ்சிகை வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.