நீங்கள் உயர் கல்வி படிப்பில் சேருகிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு வேலையைப் பெறும் வரை உங்கள் படிப்புக் கட்டணத்தைச் செலுத்துவதைத் தள்ளிப் போடுவதற்கு நீங்களும் தகுதியுடையவராக இருக்கலாம்.
ஆஸ்திரேலியாவில் உயர் கல்வியில் சேரும்போது, உங்கள் படிப்புகளுக்கான கட்டண ஏற்பாடுகளை நீங்கள் செய்ய வேண்டும்.
சில மாணவர்கள் கடனைத் தவிர்க்க தங்கள் படிப்புக் கட்டணத்தை முன்கூட்டியே அவர்களால் செலுத்த முடியும், ஆனால் பெரும்பாலானவர்கள் கல்விக் கட்டணத்தை ஈடுகட்ட அரசாங்கக் கடனைத் தேர்வு செய்கிறார்கள்.
இந்த அரசாங்க கடன் திட்டம் உயர் கல்வி கடன் திட்டம் அல்லது HELP என அழைக்கப்படுகிறது.
ஐந்து குறிப்பிட்ட உதவித் திட்டங்கள் உள்ளன, HECS-HELP மற்றும் FEE-HELP ஆகியவை மிகவும் பொதுவானவை.
கல்வித் துறையின் செய்தித் தொடர்பாளர் Stephanie Stockwell கருத்துப்படி, HECS-HELP கடனுக்குத் தகுதிபெற, நீங்கள் Commonwealth Supported Place (CSP) திட்டத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு மாணவர் CSP திட்டத்திற்கு தகுதி பெறும் போது அவரின் கல்விக்கான கட்டணத்திற்கு பெடரல் அரசு மானியம் வழங்கும் ஆனால் மாணவரும் சில தொகை கட்டவேண்டி வரும் அந்த சமயத்தில் அவர் HECS-HELP கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மேலும் கூறுகிறார் Stephanie Stockwell.
ஐந்து குறிப்பிட்ட உதவித் திட்டங்கள் உள்ளன, HECS-HELP மற்றும் FEE-HELP ஆகியவை மிகவும் பொதுவானவை.Stephanie Stockwell, Department of Education spokesperson

How is your HELP debt calculated? Source: Getty / Getty Images/Kanawa_Studio
HECS-HELP அல்லது FEE-HELP ஐப் பெறுவதற்கான உங்கள் தகுதி, நீங்கள் எங்கு படிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படும் என்று Ms Stockwell கூறுகிறார்.
HECS-HELP கடனை நீங்கள் Commonwealth Supported Place-களில் பதிவுசெய்துள்ள இடத்தில் பயன்படுத்தலாம், மேலும் ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் மானியம் இல்லாத பல்கலைக்கழகத்தின் முழு கட்டணம் செலுத்தும் இடத்தில் நீங்கள் FEE-HELP கடனைப் பயன்படுத்தலாம் என்று மேலும் விளக்குகிறார் Ms Stockwell.
HECS-HELP மற்றும் FEE-HELP இன் நன்மை என்னவென்றால், மாணவர்கள் தங்கள் படிப்புக் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் அனைத்து மாணவர்களும் காமன்வெல்த் ஆதரவு இடம் அல்லது Help கடனை பெறுவதற்கு தகுதி பெற மாட்டார்கள்.
HELP கடனை பெறுவது குடியுரிமை மற்றும் விசா மற்றும் வதிவிட நிலையைப் பொறுத்தது என்று ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்களின் செயல் தலைமை நிர்வாகி Renee Hindmarsh விளக்குகிறார்.
Bridging படிப்பை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு தொழில் வல்லுநர்கள் குறிப்பிட்ட FEE-HELP கடனை அணுகலாம். முழு நேர அல்லது பகுதி நேர படிப்பில் ஈடுபட்டாலும், நீங்கள் எத்தனை யூனிட்களை மேற்கொள்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் உங்கள் HELP கடன் கணக்கிடப்படும்.
Bruce Chapman ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் எமரிட்டஸ் பேராசிரியர் மற்றும் HECS அமைப்பின் வடிவமைப்பு பணியில் ஆரம்ப காலத்தில் ஈடுபட்டவர்.
கட்டணம் வருடாந்திர அடிப்படையில் வசூலிக்கப்படுவதில்லை, ஆனால் ஒரு யூனிட் அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது என்று அவர் கூறுகிறார். நீங்கள் எவ்வளவு யூனிட்களை எடுத்துக்கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் HELP கடனில் சேர்க்கப்படும். உங்கள் கடனை அடைக்கும்போது உங்களுக்காக கணக்கீடுகள் செய்யப்படும்.
உங்களுக்கு வேலை கிடைக்கும் வரை உங்கள் கடன் தீண்டப்படாமல் இருக்கும். உங்கள் முதலாளி உங்கள் சம்பளத்திலிருந்து வருமான வரியை நிறுத்தி வைக்கும் போது, உங்கள் HELP கடனைச் செலுத்துவதற்குச் சிறிது கூடுதலாகப் பிடித்தம் செய்வார்கள். ஆனால் இது உங்கள் ஆண்டு வருமானம் ஒரு குறிப்பிட்ட அளவை அடைந்தவுடன் மட்டுமே நடக்கும், என்று பேராசிரியர் Chapman கூறுகிறார்.
தற்போது உங்கள் ஆண்டு வருமானம் $52,000 அல்லது அதற்கு மேல் இருக்கும் போது அதில் 1 சதவீதம் $520 HELP கடனுக்காக பிடிக்கப்படும் என்று மேலும் விளக்குகிறார் பேராசிரியர் Chapman.

Horizontal color image of a small group of Australian university students from different heritages and backgrounds. Credit: funky-data/Getty Images
பேராசிரியர் Chapman குறிப்பிடுவது போல், இது வங்கிக் கடனைப் போன்றது அல்ல.
வங்கி கடன் என்றால் நாம் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு திருப்பி செலுத்தவேண்டும் மேலும் இந்த கடன் எப்போது முடியும் என்பது நமக்கு தெரியும். ஆனால் Help கடன் - சிலர் 5 வருடங்களில் கட்டி முடிக்கலாம் அல்லது சிலர் அவர்கள் வேலையிலிருந்து ஓய்வு பெறும் வரை காட்டிக்கொண்டே இருக்கலாம். சராசரியாக HELP கடன் கட்டி முடிக்க 10 வருடங்கள் ஆகலாம் என்கிறார் பேராசிரியர் Chapman.
ஆனால் நாட்டை விட்டு வெளியேறினால் என்ன ஆகும்?
நீங்கள் நீண்ட காலம் வெளிநாட்டில் வாழ்ந்தால் உங்கள் கடன் நீங்காது. நீங்கள் வெளிநாட்டில் வசிக்கும் போது நீங்கள் ஈட்டிய வருமானத்தை ஆஸ்திரேலியா அரசிடம் தெரிவிக்க வேண்டும் அதன் அடிப்படையில் நீங்கள் கடனை கட்டி முடிக்க வேண்டும்.

The University of Sydney Source: AAP
நீங்கள் வருமான வரம்பை அடையும் வரை உங்கள் கடனைச் செலுத்தத் தொடங்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், உங்கள் கடன் அதிகரிக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால், HELP கடனின் நிலுவைத் தொகை ஒவ்வொரு ஆண்டும் குறியிடப்படும்(indexed) என்று Stephanie Stockwell எச்சரிக்கிறார்.
HELP திட்டமானது வெளிநாட்டு மாணவர் கடன் திட்டங்களிலிருந்து தனித்து நிற்கும் ஒரு முக்கியமான அம்சத்தைக் கொண்டுள்ளது என்று பேராசிரியர் Chapman குறிப்பிடுகிறார். கடனைத் திருப்பிச் செலுத்துவது உங்கள் வருமானத்தைப் பொறுத்தது என்பதால், நீங்கள் நிதி நெருக்கடியை அனுபவித்தால், debt collection கடனை வசூலிப்பதில் இருந்து உங்களுக்குப் பாதுகாப்பு உண்டு.
நீங்கள் HECS-HELP அல்லது FEE-HELP கடனுக்குத் தகுதி பெற்றிருந்தால், உங்கள் பாடநெறியின் காலத்திற்கு ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று Renee Hindmarsh கூறுகிறார். விண்ணப்ப செயல்முறை நேரடியானது.
உங்கள் உயர்க்கல்வி படிப்புகளுக்கு நிதியுதவி செய்வதற்கான அரசாங்க உதவி பற்றிய கூடுதல் தகவலுக்கு -ஐ பார்வையிடவும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.